உலக வானிலை நாள் World Meteorological Day

உலக வானிலை நாள் World Meteorological Day

 

உலக வானிலை நாள் ( World Meteorological Day )

 இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள்.

ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.                                                              

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர்போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், .நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம்,பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.

வானிலை மாறுபடுவதால்…: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.

காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளைஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.

World Meteorological Day takes place every year on 23 March and commemorates the coming into force on 23 March 1950 of the Convention establishing the World Meteorological Organization. It showcases the essential contribution of National Meteorological and Hydrological Services to the safety and wellbeing of society and is celebrated with activities around the world.  The themes chosen for World Meteorological Day reflect topical weather, climate or water-related issues.

Source By : https://pozhichaisundar.blogspot.com/

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close