ஏறு தழுவுதல் தமிழர்களுக்கு! காளையை அணைஞ்சா பொண்ணு கிடைக்கும்! வில்லை ஒடைக்கிறதெல்லாம் அறிவியலுக்கப்பாலானது!
ஆனால் பெண் கழுகுகள் ஆண் கழுகுகளை இணையாகச்சேர்த்துக்கொள்ள வைக்கும் சோதனை அவ்வளவு த்ரில்லானது. பெண் கழுகு ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு மேலே மேலே பறக்கும். ஆண்கழுகும் கூடவே பறக்கும்! எதிர்பாராத தருணத்தில் பெண் கழுகு குச்சியை தவறவிடும். அதைத் துரத்திப்பிடிக்க வேண்டும் ஆண் கழுகு. இப்படி மணிக்கணக்கில் பெண் கழுகு குச்சியை கீழே போட ஆண் கழுகு சரியாக குச்சியைப்பிடிக்க வேண்டும். ஆண் கழுகின் குச்சி பிடிக்கும் திறனை வைத்துத்தான் பெண் கழுகு தன் இணையைத் தேர்ந்தெடுக்கும்.
கழுகுகளின் பார்வைத்திறன் அத்தனை கூர்மை. ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள பொருளைக்கூட கச்சிதமாக கூர்நோக்கும் திறன் கொண்டது.
அப்புறம் கழுகுகள் ஒருவனுக்கு ஒருத்தி டைப்! டெக்னிக்கலாக மோனோகேமஸ்! அதனால் தான் இந்த சோதனையெல்லாம்!
Share :
Tags :