உலக அயோடின் குறைபாடு தினம்

உலக அயோடின் குறைபாடு தினம்

 

உலக அயோடின் குறைபாடு தினம் இன்று. உடலில் எந்த சத்து குறைந்தாலும் உடலுக்கு பாதிப்பு தான். சில குறைபாடுகள் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடியவை. அப்படியான ஒன்று அயோடின் குறைபாடு. 
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். உப்பு என்பது உடலுக்கு இன்றியமையாதது. உப்பு உடல் உறுப்புகளுக்கு தேவையாக இருக்கிறது. இதை உடலால் உற்பத்தி செய்யமுடியாது. இதை உணவின் மூலமே பெறப்படும் இன்றியமையாத பொருள். நமது உடலில் தைராய்டு என்னும் ஹார்மோனை உருவாக்க மனித உடலில் குறிப்பிட்ட அளவு அயோடின் தேவைப்படுகிறது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உட்கொள்ளல் வேண்டும்.

அதே நேரம் இந்த குறைபாடு உடலில் பல குறைபாட்டையும் உண்டாக்கிவிடக் கூடும். உலக அயோடின் குறைபாடு நாளான இன்று ஒரு மனிதனுக்கு எவ்வளவு அயோடின் தேவை, அவை குறைந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் உண்டாகும், அதற்கு காரணம் என்ன போன்றனவற்றை தெரிந்துகொள்ளலாம்.

அயோடின்
உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கியமானது அயோடின் ஆகும். இது இல்லையெனில் கடுமையான வளர்ச்சி பிரச்சினைகளை எதிர்கொள்வோம். ஏனெனில் அயோடின் தைராய்டு ஹார்மோன்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

அயோடின் நுண்ணளவு தனிமம். இது உணவில் இருந்து பெறக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். தைராய்டு ஹார்மோன்களில் அயோடின் ஒரு பாகம். அதனால் தான் அயோடின் குறைபாடு தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணீகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இவை அளவில் குறையும் போது அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

​எவ்வளவு அயோடின் தேவை
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 0.07 மில்லிகிராம் இருந்து 0.038 மில்லி கிராம் அளவு அயோடின் தேவை. 6வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 0.1 மில்லி கிராமில் இருந்து 0.14 மில்லி கிராம் வரையான அயோடின் எடுத்துகொள்ள வேண்டும்.

இள வயதினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 0.11 மில்லி கிராம் முதல் 0.12 மில்லி கிராம் அளவு உணவில் சேர்த்து சாப்பிடுவது அவசியம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி தினமும் 150 மைக்ரோ கிராம் அளவு அயோடின் உட்கொள்ள வேண்டும். கர்ப்பக் காலத்தில் 250 மைக்ரோ கிராம் அளவு எடுத்துகொள்ள வேண்டும்.

இதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவக்காலம் வரையிலும் இந்த அயோடின் குறைபாடு இருக்கும். இது கர்ப்பக்காலத்தில் நீடிக்கும் பொது கருவில் வளரும் குழந்தைக்கு செவித்திறன் பாதிப்பு, தைராய்டு சுரப்பில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்க கூடும். 

அயோடின் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் உண்டாக கூடும் என்று தெரிந்துகொள்வோம்.

​அயோடின் குறைபாடுகள் அறிகுறிகள்
அயோடின் குறைபாடுகள் தைராய்டு பிரச்சனைகள், மார்பகம், புராஸ்டேட் இனப்பெருக்க தொடர்பான பிரச்சனைகள் உண்டாக கூடும். கழுத்தின் முன்புறத்தில் வீக்கம் இருப்பதும் அயோடின் குறைபாட்டுக்கான அறிகுறிகள் ஆகும்.தைராய்டு பெரிதாக வளரும் போது இது உண்டாக கூடும். நகங்கள் உடைய கூடும், முடி உதிர்வு இருக்கும்.

தைராய்டு முன்கழுத்துக்கழலை தைராய்டு சுரப்பியின் விரிவாக்கம் காரணமாக கழுத்தில் வீக்கம், மூச்சுத்திணறல், விழுங்குவதில் சிரமம் போன்றவை உண்டாக கூடும்.

தைராய்டு சுரப்பி குறைவதால் எடை அதிகரிப்பு, அதிக சோர்வு, வறண்ட தோல் போன்ற பிரச்சனைகள் உண்டாக கூடும்.

இதயத்துடிப்பு மிக மெதுவாக துடிக்க கூடும்.

சிலருக்கு கண்களில் வீக்கம், சருமம் வெளிர்ந்து காணப்படும். பெண்களுக்கு கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். கருச்சிதை, குழந்தை இறப்பு, குழந்தை முன்கூட்டியே பிறப்பது, செவி குறைபாடு போன்றவை உண்டாக கூடும்.

காரணங்கள்
உப்பு என்பது அயோடின் நிறைந்த மூலம்.உணவில் குறைந்த அளவு அல்லது குறைவான அயோடின் குறைந்த உப்பு பயன்படுத்தும் போது அயோடின் குறைபாடு ஏற்படுத்திவிடக்கூடும். அதோடு உணவில் உள்ள அயோடின் சமைக்கும் போது வெளியேறிவிடுகிறது. குறிப்பாக பழங்கள் அல்லது காய்கறிகள் குறைந்த அயோடின் கொண்டிருக்கிறது.அதனால் தான் சைவ உணவு வகைகளை எடுத்துகொள்பவர்களுக்கு அயோடின் குறைபாடு அதிகமாக உண்டாகிறது. அதிகபடியாக உடற்பயிற்சி செய்யும் போதும் அயோடின் வெளியேறுகிறது. அயோடினை உடல் சேமித்து வைக்காது என்பதால் சிறிய அளவு அயோடினை உடல் அவ்வபோது எடுத்துகொள்ள வேண்டும்.

​பரிசோதனைகளும் தீர்வுகளும்
சிறுநீர் பரிசோதனையின் மூலம் அயோடின் குறைபாட்டை கண்டறிய முடியும். இதில் இலேசான குறைபாடு ( 50-99) மிதமான (20-49 ) கடுமையான அயோடின் குறைபாடு (20) கண்டறியப்படுகிறது. தைராய்டு அளவு, பிறந்த குழந்தைக்கு சீரம் தைராய்டு தூண்டுதல் ஹார்மோன், ரேடியோ அயோடின் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

சிகிச்சையில் முதன்மையானதாக அயோடைஸ் உப்பை உணவில் சேர்ப்பதன் மூலம் அயோடின் குறைபாட்டை குணப்படுத்த முடியும். அயோடின் சேர்ந்த உணவுகளாக சொல்லப் படுபவையில் முக்கியமானவை வெள்ளை மீன், முட்டை போன்றவை. உப்பு மூலம் மட்டுமே உணவை எடுத்துகொள்ளலாம் என்று சொன்னாலும் அது எடுத்துகொள்ளும் உணவை பொறுத்து அளவுகள் மாறக்கூடும்.

பெரும்பாலும் அயோடின் குறைபாட்டுக்கு காரணம் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அயோடைஸ் இல்லாத உணவுகள் என்றும் சொல்லலாம். அயோடின் குறைபாட்டுக்கான ஆய்வு ஒன்றில் பால் மற்றும் முட்டை சாப்பிடுபவர்களை காட்டிலும் இதை எடுத்து கொள்ளாதவர்களிடம் அதிக குறைபாடு கண்டறியப்பட்டது.

​அயோடின் இருக்கும் உணவுகள்
பால். தயிர், சீஸ்,மீன் (பன்னா) இறால், உருளைக்கிழங்கு தோலோடு போன்றவற்றை எடுத்துகொள்ளலாம். அதே நேரம் அயோடின் உறிஞ்சுதலை குறைக்கும் சோயா, முட்டைகோஸ், ப்ரக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற தைராய்டு மூலம் குறைந்த உறிஞ்சுதலை தரும் உணவுகளை தவிர்க்கவும். உடல் நச்சுகளை வெளியேற்றி ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாடு இல்லாமல் செய்யலாம்.

Article By : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close