தமிழ் புத்தாண்டு அறிவோம்

தமிழ் புத்தாண்டு அறிவோம்

 

உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் இந்நாளில், அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். இவர்களோடு மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்கள் இட்டு அழைத்து, கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்நாளில் தமிழ் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, அலங்காரத் தோரணமிடுவர். இதையடுத்து பாரம்பரிய புத்தாடை அணிந்து, மூத்தோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவர். தொடர்ந்து சுவையான சைவ உணவுகளை சமைத்து, பகிர்ந்து உண்டு, இனிப்புகளை பரிமாறிக் கொள்வர். பின்னர் கோவில்களுக்கு சென்று, புத்தாண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனை செய்வர்.

தமிழர்களின் நாட்காட்டியில் அமைந்துள்ள முதல் மாதமான சித்திரையின் முதல் நாளை ’புது வருஷம்’ என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் அழைக்கின்றனர்.அன்றைய வழிபாட்டின் போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர். அதேபோல் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுள் சிலைகளுக்கு முன்பு வைத்து வழிபாட்டில் ஈடுபடுவர்.

வீட்டில் நேர்மறை நிகழ்வுகள் ஏற்படவும், கடவுள் மற்றும் மூத்தோரின் ஆசிர்வாதங்கள் கிடைக்கவும் வாசலில் புதுக்கோலம் இடுவர். அரிசி மாவில் கோலமிட்டு, வண்ணப் பொடிகளில் அலங்காரமிடுவர். இத்தகைய சிறப்புகள் கொண்ட தமிழ்ப் புத்தாண்டில், இனிய மனதுடன் வரவேற்று, புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு விளம்பி பிறந்தது. இந்தாண்டு விகாரி என்ற பெயரில் பிறந்துள்ளது.

நன்றி: Indian Express.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close