வயிறு

வயிறு

 

இந்த வயிறு வயிறுன்னு எல்லாருக்கும் ஒரு வயிறு இருக்கும்,

சிலருக்கு பானை மாதிரி இருக்கும், சிலருக்கு பூனை மாதிரி இருக்கும், சிலருக்கு பாம்பு மாதிரி இருக்கும், சிலருக்கு பத்து மாசம் மாதிரி இருக்கும், ஆனா கண்டிப்பா வயிறுன்னு ஒண்ணு இருக்கும்!

சரி அந்த வயிறு எப்படி வேலை செய்யுதுன்னு எத்தனை பேருக்கு தெரியும்!

அது நமக்காக எவ்ளோ கஷ்டப்படுதுன்னு, அதை நம்ம எவ்ளோ கஷ்டப்படுத்துறோம்னு எத்தனை பேருக்கு தெரியும்!

வாங்க ஒரு முறை வயித்துக்கு உள்ள போயி பாப்போம்!

வாயில ஆரம்பிச்சு,தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் இப்படி நிறைய பேரோட சம்மந்தப்பட்டு இருக்கு நம்ம வயிறு!

வயித்துல மட்டும் ஆயிரக்கணக்கான பேர் வேலை செய்யறாங்க!

எப்போ நம்ம எதை உள்ள போடுவமோன்னு தெரியாம எல்லா நேரத்திலயும் தயாரா வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க!

மத்த நேரம் முன்ன பின்ன இருந்தாலும் மதியம் ஒரு மணி ஆச்சின்னா

எல்லாரும் இரைப்பையில ஆவலா கும்பலா உட்கார்ந்திருப்பாங்க,

அதுக்கு மேல லேட் ஆச்சின்னா, அவங்களுக்கு அவங்களே பேசிப்பாங்க,

என்னண்ணா இன்னும் ஒண்ணும் காணோம், மணி ஒண்ணுக்கு மேல ஆகுது

எங்க போனான்னு தெரியலயே என்று பேச்சு ஆரம்பிக்கும், இரு இரு எங்க போகப்போறான், ஏதாவது வேலை இருக்கும் எனும் போது இன்னொருவன் சொல்வான், அண்ணே பிரைன்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு, இப்போ தான் ஓட்டல்ல போய் உட்கார்ந்திருகானாம், கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்திடும்!

சரி சரி எல்லாரும் ரெடியா இருங்க இவன பத்தி தான் தெரியும்ல எனும் போதே,

உள்ளே ஒரு உருண்டை குஸ்கா வந்து விழும், என்னாணே இன்னக்கும் இவன்

பிரியாணி சாப்பிட போயிருக்கான், அதெல்லாம் பேசிட்டிருக்க நேரமில்ல

ஆளாளுக்கு வேலைய பாருங்க எனும் போதே மேலும் மேலும் பிரியாணி வந்து விழ, எல்லோரும் எழுந்து  ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கொண்ட பைப்பை திறந்து விடுகிறார்கள்! அந்த ஆசிட் பிரியாணி முழுவதும் கலக்கிறது!

ஆளுக்கொரு பக்கம் வேலை செய்து கொண்டு இருக்க, அண்ணே மொத்தம் அரிசி அரிசியா வருதுண்ணே, கொஞ்சமாவது அவனை மென்னு அசை போட்டு

அனுப்ப சொல்லுங்கண்ணே, மேல தான் உமிழ்நீர் இருக்கு இல்ல அதுல கொஞ்சம் கலந்து அனுப்ப முடியாதா இவனால....

அண்ணே நேத்து மாதிரியே இன்னைக்கும் தந்தூரி சிக்கன் சாப்பிடுறாண்ணே,

என்ன மசாலா என்ன கருமமோ வேலை செய்ற நமக்கு உடம்பெல்லாம் எரியுது என்றபடி, எல்லோரும் ஆசிடை தெளித்து கூழ் போல் ஆக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்! அவர்கள் அவசர அவசரமாக கடினமாக உழைத்து

ஆசிட் தெளித்து கூழாக்க, மேலிருந்து எண்ணெய், மசாலா காரம், உப்பு என்று எது எதுவோ அதிகமாக வந்து அரைகுறையாக விழுந்துகொண்டே இருக்கிறது!

இந்த காரத்தின் வீரியத்தில்  லர் இறந்து போகிறார்கள் உட்புற சுவரில் செல்லரிப்பது போல் அரித்து போகிறது! அதற்கு ஒரு பக்கம் மருந்துபோட்டு

வேலையை தொடர்வதற்குள் மீண்டும் மேலிருந்து, கோக் பெப்சி போன்ற ஏதோ

கெமிக்கல் சேர்த்த தண்ணீர் கிழே வந்து விழ, இன்னும் சிலர் இறந்து கிறார்கள்,

ஆட்கள் போதவில்லை என்று மேலே மனு கொடுத்து இன்னும் சிலரை வேலைக்கு

வைக்கிறார்கள்! கூழாக மாற்றி அடுத்த கட்டத்திற்கு அனுப்புவதற்குள், உள்ளே ஆட்கள் வேலை செய்ய கூட இடமில்லாமல் அந்த சாப்பாட்டு ராமன்  வயிறு முட்ட தின்று முடிக்க இரைப்பை முழுவதும் திணறி போகிறது!

இப்படி இருந்தா எப்படிண்ணே, என்னைக்காவது ஒரு நாள் இப்படி போட்டா அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யலாம், மூணு வேளையும் இப்படியே வயிறு புல்லா போட்டு, பத்தாததுக்கு தண்ணிய வேற ஊத்தி விடுறான் எல்லாத்தையும்

சரி பண்ணி அனுப்பி வைக்கிறதுக்குள்ள உயிர் போயி உயிர் வருதுண்ணே,

என்று புலம்ப, நல்ல வேளை அவன் தண்ணி அடிக்கலண்ணு சந்தோஷப்படுங்க

தம்பி என்று கூற, யாரு சொன்னது, போன சனிக்கிழமை எங்கேயோ பார்ட்டின்னு போயி, கண்ட கண்ட சரக்கு, கண்ட கண்ட நான்வெஜ்ஜுன்னு

ராத்திரி 12 மணி வரைக்கும் உள்ள தள்ளிட்டே இருக்கான், எங்களால ஒண்ணும் முடியல, ஆல்கஹால்ல மாட்டி கும்பல் கும்பலா இறந்துட்டாங்க, வந்த கோபத்துல எல்லோரும் சேர்ந்து வேலை செய்யமுடியாதுன்னு எதிர்த்து வெளியே தள்ளுனோம் அதுக்கப்புறம் தான் வாந்தி எடுத்தான்! சாப்பிடுறது தப்பில்லண்ணே நிறுத்தி நிதானமா எண்ணெய் மசாலா எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா மென்னு சாப்டா அவனுக்கு தான் நல்லது, கண்ட கருமத்தை எல்லாம் அரைகுறையா தின்னு தின்னு வயிறு பாருங்க கழுதை மாதிரி வீங்கி போயிருக்கு, உள்ள மொத்தம் ஒரே புண்ணாயிடுச்சி, சிறுகுடல் பெருங்குடல்ல வேற ரத்த கசிவு இருக்குன்னு ஒரே கம்ப்ளைன்ட்டு, கணயம், கல்லீரல் எல்லாம்

இப்பவே முடியலன்னு உட்கார்ந்துட்டாங்க நாளை பின்ன சீரியஸ் ஆச்சின்னா

அவன் தான் சாகப்போறான் நமக்கென்ன, தின்னும் போது நல்லது கெட்டது

பாத்து தின்னாம மாடு மாதிரி கண்டதை மேய்ஞ்சா இதான் கதி!

சரி வாங்க, சாகுற வரைக்கும் நம்ம கடமையை நம்ம செய்வோம், அந்த பக்கம் யாரும் போகாதீங்க, சுவரு எல்லாம் மொத்தம் தின்னுட்டு ஒரே ரத்தமா இருக்கு...!

உங்கள் வயிற்றின் உள்ளே வாழும் அப்பாவிகள்.!

Article By:

. சண்முக சூரியன்

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்

 காய்கறி சிகிச்சையாளர்.  

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close