செம்மறியாட்டின்பலவகைஇனங்கள்.

செம்மறியாட்டின்பலவகைஇனங்கள்.

 

செம்மறியாட்டின்பலவகைஇனங்கள்...

1.மேச்சேரி

இவ்வினம் தமிழ்நாட்டின் சேலம் கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும், தருமபுரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.

*இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகிறது

* நடுத்தர உடலமைப்பு கொண்டது. இதனுடைய தோல் வெளிறிய சிவப்பு நிறத்தில் இருக்கும்.

*கிடாவுக்கும், பெட்டை ஆடுகளுக்கும் கொம்புகள் கிடையாது

*வால் குட்டையாகவும், மெலிதாகவும் இருக்கும்

*வளர்ச்சியடைந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.

2. சென்னை சிவப்பு

இவ்வினம் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றது.

*இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகின்றது

*சிவப்பு நிறம், இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு வரை கொண்டது

*சில ஆடுகளுக்கு முன்நெற்றி, அடிவயிறு மற்றும் கால்களுக்கிடையில் வெள்ளைநிறம் காணப்படும்

*வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 24 கி.கிஎடையுடனும் இருக்கும்.

3. இராமநாதபுரம் வெள்ளை

இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றது.

*இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது

*நடுத்தர உடலமைப்பைக் கொண்டது

*பெரும்பாலும் வெள்ளை நிறத்திலிருந்தாலும் சில *ஆடுகளில் உடல் முழுவதும் கருமைநிறப் பட்டைகள் காணப்படும்

*கிடாவுக்கு முறுக்கிய வளைந்த கொம்புகள் உண்டு, பெட்டைக்கு கொம்புகள் கிடையாது.

*கால்கள் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்

*வளர்ந்த கிடா 31 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 23 கி.கி எடையுடனும் இருக்கும்

4.கீழக்கரிசல்

இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றது

*இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகின்றது

*நடுத்தர உடலமைப்பைக் கொண்டது

*கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. தலை, வயிறு மற்றும் கால்களில் கருமைநிறம் காணப்படும்

*வால் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்

*கிடாவுக்கு தடித்த, முறுக்கிய கொம்புகள் உண்டு

*பெரும்பாலான ஆடுகளில் கீழ்தாடையில் தாடி (வாட்டில்) காணப்படும்.

*வளர்ந்த கிடா 29 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.

5.வேம்பூர்

இவ்வினம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம் பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் காணப்படுகிறது.

*இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது

*இவை உயரமான ஆடுகளாகும்

*வெள்ளை நிற உடலில், சிவப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும்

*தொங்கும் காதுகளைக் கொண்டது

*வால் குட்டையாகவும், மெலிந்தும் காணப்படும்

கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

*வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 28 கி.கி எடையுடனும் இருக்கும்

6. நீலகிரி

இவ்வினம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது

*மென்மையான ரோம உற்பத்திக்காகப் பயன்படுகிறது

*நடுத்தர உடலமைப்பைக் கொண்டது

*பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்பட்டாலும், சில ஆடுகளில் உடல் மற்றும் முகம் பழுப்பு நிறத்தில் காணப்படும்

*அகன்ற தொங்கும் காதுகளைக் கொண்டது

*பெட்டைக்குக் கொம்பு இல்லை

*வளர்ந்த கிடா மற்றும் பெட்டை ஆடுகள் 31 கி.கி எடையுடன் இருக்கும்

7. திருச்சி கருப்பு

இவ்வினம் தமிழ்நாட்டின் திருச்சி, பெரம்பலூர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காணப்படுகிறது

*முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது

சிறிய உடலமைப்பைக் கொண்டது

*உடல் முழுவதும் கருமை நிறம் கொண்டது

*கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

*காதுகள் சிறியதாகவும், முன்னோக்கியும்,  *கீழ்நோக்கியும் இருக்கும்

*வளர்ந்த கிடா 26 கி.கி எடையுடனும் பெட்டை 19 கி.கி எடையுடனும் இருக்கும்

8.கோயம்புத்தூர்

இவ்வினம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர்  மாவட்டத்தில் காணப்படுகிறது

முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது

நடுத்தர உடலமைப்பைக் கொண்டது

*பொதுவாக வெண்மை நிறம் கொண்டது. தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறம் காணப்படும்

*30 சதவிகித பெட்டை ஆடுகளில் கொம்புகள் கிடையாது

*வளர்ந்த கிடா 25 கி.கி எடையுடனும் பெட்டை 20 கி.கி எடையுடனும் இருக்கும்

9. டெக்கானி

இவ்வினம் ராஜஸ்தான் மாநிலத்தின் மென்மையான ரோமம் கொண்ட செம்மறியாட்டினத்தையும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் முரட்டு ரோமம் கொண்ட இனங்களையும் கலந்து உருவாக்கப்பட்டது

இவ்வினம் மும்பை டெக்கான் பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தின் ஒருசில பகுதிகளிலும், ஆந்திர பிரதேசத்திலும் காணப்படுகின்றது.

*சிறிய மற்றும் கடினமான உடலமைப்பைக் கொண்டது

வறண்ட சூழ்நிலைகளையும் தாங்கக்கூடிய திறன் பெற்றது

*கருமை மற்றும் மிதமான கருமை நிற ரோமத்தினைக் கொண்டது

*ஒரு செம்மறியாட்டிலிருந்து ஒரு ஆண்டில் 4.54 கி.கி ரோமத்தினை உற்பத்தி செய்யலாம்.

*இவ்வினத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ரோமங்கள் முரட்டு மற்றும் மென்மையான  ரோமங்கள் கலந்திருப்பதால் தரம் குறைவாகக் காணப்படுகிறது. எனவே கம்பளங்கள் தயாரிக்கக் பயன்படுகிறது.

*பெரும்பாலும் இவ்வினம் இறைச்சி உற்பத்திக்காகக் பயன்படுகிறது

10. நெல்லூர்

இவ்வினம் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர், பிரகாசம் மற்றும் ஓங்கோல் மாவட்டங்களில் காணப்படுகிறது

*இவை உயரமான ஆடுகளாகும். கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளைத் தவிர உடலில் குறைவான ரோமங்களைக் கொண்டது

*கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

*பெரும்பாலான ஆடுகளில் தாடி (வாட்டில்) இருக்கும்.

வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும் பெட்டை 28 கி.கி எடையுடனும் இருக்கும்

*இந்தியாவிலேயே மிக உயரமான செம்மறியாடு, வெள்ளாடு போன்ற தோற்றமுடையது

*மிக நீண்ட முகம் மற்றும் காதுகளைக் கொண்டது.

பொதுவாக பழுப்பு அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்.

11. மாண்டியா

இவ்வினம் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் காணப்படுகிறது

சிறிய உடலமைப்பைக் கொண்டது

*பொதுவாக வெண்மை நிறம் உடையது. சில ஆடுகளில் முகம் மற்றும் கழுத்து வரையிலும் பழுப்பு நிறம் காணப்படும்

*பின்புறத்திலிருந்து பார்க்கும்பொழுது `Ç’ (தலைகீழான ஆங்கில எழுத்து ரு) வடிவத்தில் காணப்படும்

*நீண்ட இலை வடிவத்திலான காதுகள் தொங்கிக்கொண்டிருக்கும்

கிடா மற்றும் பெட்டை ஆடுகளில் கொம்புகள் கிடையாது

*வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 23 கி.கி எடையுடனும் இருக்கும்

*இந்திய செம்மறியாட்டினங்களில் மிகச்சிறந்த இனமாகும்

12. மார்வாரி

தரை??

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close