State First Award For Science Exhibition in Year 2018

State First Award For Science Exhibition in Year 2018

 

MY ( Global Nature Foundation ) 4th STATE LEVEL ACHIEVEMENT !!!..
திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 752 மாதிரிகளில் எங்களது ராகவேந்திர மெட்ரிக் பள்ளி மாநிலத்தின் முதல் இடத்தை பெற்றது. 
அமைச்சர்கள் திரு.தங்கமணி மற்றும் திருமதி.சரோஜா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் திருமதி.ஆசியாமரியம், விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் தாளாளர் திரு.கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.விசுவநாதன், 
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி.உஷா மற்றும் கரூர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரால் பாராட்டப்பட்டு பரிசுகள் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. 
அறிவியல் கண்காட்சிக்காக கடந்த ஒரு வரமாக அயராது பாடுபட்ட மாணவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை அபிராமி அவர்களுக்கும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்த விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கலைத்துறை முதல்வர் திரு. கோபிநாத் அவர்களுக்கும், அறிவியல் கண்காட்சி முடியும் வரை மாணவர்களை தங்கள் வீட்டில் தங்கவைத்து மூன்று நாட்கள் சலிக்காமல் எங்களுக்கு உதவிய நாமக்கல் கௌரிஸ் ஸ்போக்கன் இங்கிலீஸ் சென்டர் திரு.வாசுதேவன் மற்றும் திருமதி.கௌரிவசுதேவன் அவர்களுக்கும், நாங்கள் வெற்றி பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close