கோவிட் 19 பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள் இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள்

கோவிட் 19 பற்றிய முக்கியமான கேள்வி பதில்கள் இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள்

 

கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய 16 சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.

 

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?

 

இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை (Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ) க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை.

 

2. கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?

 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது.

 

3. கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?

 

ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் CT Lungs எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.

 

4. எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?

 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் RT PCR பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது.

 

5. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?

 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி 99 சதவீதம் மூக்கு வழியாக தான் இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது.

 

6. பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?

 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரிய?

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close