தேவாங்கு (Slender loris)
தேவாங்கு - எழுபதுகளில் என் குழந்தைப் பருவ நினைவுகளில் இன்னும் பசுமையாக இருக்கும் விலங்கினம் இது. இரவாடி விலங்குகளான இவைகள் பாறைகளின் மேல் மிகவும் மெதுவாக நகரும் இவைகள் மரக்கிளைகளில் மிக வேகமாக பற்றி எழும்பி போய்க் கொண்டே இருக்கும். குரங்கினங்களின் வழித்தோன்றல் என்றாலும் அவைகளின் சேட்டைகள் இவைகளிடம் கிடையாது. பொதுவாக மனிதர்களை விட்டு தள்ளியே வாழ விரும்பும் உயிரினம் இது, ஆனாலும் நம்ம அசுர இனமான மனிதர்களின் முட்டாள் தனமான மூட நம்பிக்கைகளுக்கு இவைகள் பலியான வண்ணமே இருக்கின்றன. புழு, பூச்சி, வண்டுகளே இவைகளின் பிரதான உணவு என்றாலும் சில நேரங்களில் பறவைகளின் கூடுகளில் உள்ள சிறு குஞ்சுகள், முட்டைகளை விழுங்கி விடுகின்றன. வேட்டையினால் அழிவதைக் காட்டிலும், விறகுகளுக்காக, விவசாயத்திற்காகவும் மலை பகுதிகளை ஒட்டிய மரங்களை அழிப்பதன் மூலமே இவைகளின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. விவசாயம் இல்லாமல் போகும் போது இவ்விடங்கள் மனிதர்களின் குடியிருப்புகளாக மாறிப் போகின்றன. அருகி வரும் இந்த அரிய விலங்கினத்தை காப்பாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை காக்க முன்னெடுப்பதின் மூலம் இயற்கையின் ஒரு பகுதியான முட்புதர்க்காடுகளும், அப்பகுதியை சேர்ந்த பிற விலங்கினங்களும், தாவரங்களும் காக்கப் படும். இப்பகுதிகள் அழிக்கப்பட்டால் அவ்விடமும் சீமை கருவேலமே பரவி விடும். -
Share :
Tags :
Write Feedback
No. of Trees Planted
7
Close