கவுதாரி பறவைகள் புல்வெளி மற்றும் முட்புதர் காடுகளின் முக்கிய அடையாளம் ஆகும். வரள்காடுகளில் கௌதாரியின் சப்தம் முடிவடையும் இடத்தில் இருந்து காடுகள் துவங்கும். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மக்கள் மாற்றும் வேளைகளில் காட்டுக்கோழியின் வாழ்விடங்களை கவுதாரிகளும், மயிலும் ஆக்கிரமிக்கின்றன. மனிதனால் பெரும் எண்ணிக்கையில் இவைகள் வேட்டையாட பட்டாலும், இன்று இவைகளை உணவாக கொள்ளும் நரி, கீரி, காட்டுப்பூனை போன்ற பிற கொல்லுண்ணிகளை மனிதன் அழித்து விட்ட காரணத்தால் இவைகளின் இனப்பெருக்கம் பாதிப்பில்லாமல் உள்ளது.
Article & Photo: Raveendran, Madurai.
No. of Trees Planted