பறவைகள் ஏன் முக்கியம்?

பறவைகள் ஏன் முக்கியம்?

 

பறவைகள் ஏன் முக்கியம்?!!!

பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன.

பயிர்களை அழித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன.

விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை வளரச்செய்கின்றன

வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன.

இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

பறவைகள் விசப்பாம்பு, விசப்பூச்சிகளை வேட்டையாடி உண்ணுகின்றன.

இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்!

பறவைகளின் அழிவேவெட்டுக்கிளிகள் பெருகுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

இன்னும் என்னென்ன அழிவுகள் வரப்போகிறது என்பதை மனிதர்களாகிய நாம் உணர வேண்டும்.

ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம்.

கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் .

பறவைகளை, ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருக்கிறார்.

பறவைகளின் 99% ம் அழிவதற்கு மனித குலமே காரணம் என்றால் அது மிகையாகாது

மனிதர்கள், கிளிப்பேச்சு கேட்கவும், குயிலிசையில் கிறங்கவும், மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை!

பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச்சங்கிலி ஊடாடுவதை உணர்வதும், உணர்த்துவதுமே "சூழலியல் "

பறவைகள் உண்டு எச்சத்தின் வழியே வெளியேறும் விதைகள்தாம் முளைக்கும். பறவைகள் அழிந்தால் தாவரங்களும் அழியும்!

மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியும் மகரந்த சேர்க்கை செய்ய முடியாது

பூஞ்சை, புல், பூண்டு, செடி, மரம் என்று தாவரத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பே பறவைகள் தான்.

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது

அதனால்

பசுமையைப் போல பறவைகளையும் பரவச் செய்வோம்

பறவைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.

Photo By : Raveendran Natarajan, Madurai.

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close