மாதவிடாயின்போதுபெண்களை பாடாய்படுத்தும் பெரும்பாடு…❗

மாதவிடாயின்போதுபெண்களை பாடாய்படுத்தும் பெரும்பாடு…❗

 

மாதவிடாயின்போதுபெண்களை பாடாய்படுத்தும் பெரும்பாடு…❗
காரணங்களும்❓ 
தீர்வுகளும்…❓❗

???? இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.

பெண்களுக்கு கருப்பை சார்ந்த நோய்கள் உண்டானால், மாதவிடாயில் முரண்பாடுகள் உண்டாகலாம். அதாவது மாதம் ஒருமுறை மாதவிடாய் வருவது இயல்பான நிலையாகும். அதை விடுத்து மாதம் இருமுறை அல்லது மும்முறைகூட மாதவிடாய் வருவது நோயின் வெளிப்பாட்டு நிலையாகும். மாதவிடாயின்போது ஐந்து நாட்களுக்கும் அதிகமாக ரத்தப்போக்கு உண்டானால் அதனையே ‘பெரும்பாடு’ என்ற நோயாய்க் கருதுகிறோம்.

அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

உடலில் இரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம்.

மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் 

????தாங்கமுடியாத வலி

????அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்

????அசெளகரியமாக உணர்தல், 

????இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் 

மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம்.

அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள் தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

⭐ வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்து கொள்ளலாம்.

???? 20 - 25 வயதுள்ளவர்கள் `Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

???? 25 முதல் 35 வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.

???? 45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு) அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது

???? நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்.❓

????அதிக இரத்தப்போக்கு, 

????அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், 

????அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், 

????அதிகமான வயிற்று வலி, 

????உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு 

போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

???? மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு❓❗

▶கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, 

▶பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், 

▶கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), 

▶சினைப்பை கட்டிகள் 
(Granulosa Cell Tumours), 

▶ கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.

▶கர்ப்பபை அல்லது கர்ப்பபைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.

▶ ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.

▶ மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.

▶ கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.

▶ தைராய்டு பிரச்சனைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்

???? அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய்
இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு……

◀களைப்புத்தன்மை, 

◀இடுப்பு வலி, 

◀வேலைத்திறன் குறைதல், 

◀நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் 

◀இருதய பாதிப்பு

போன்றவை ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். 

⭐எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 

➡ மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். 

➡நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

???? மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

#உணவில்………

◀முருங்கைக்கீரை, 

◀அகத்திக் கீரை, 

◀மணத்தக்காளிக் கீரை, 

◀பசலைக் கீரை, 

◀பிரண்டை, 

◀பாகற்காய், 

◀சுண்டைக்காய், 

◀முருங்கைக்காய், 

◀பப்பாளிப்பழம், 

◀அன்னாசிப்பழம், 

◀பேரீச்சம்பழம், 

◀அத்திப்பழம் 

◀பன்நீர் திராட்சை

◀காய்ந்த முந்துரி பழம்

போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

#அதிகஉதிரப்போக்குக்கு_சில 
#எளியமருத்துவக்குறிப்புகள்❓

???? பெரும்பாடு நோய்க்கு மருந்து

???? தேவையான பொருட்கள்

கருவேலம் பட்டை, அசோகம் பட்டை, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், மாதுளை ஓடு, வில்வ ஓடு, ஆவாரம்பிசின் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு வாங்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். 

மாதவிடாய் ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடித்தால் கண்டிப்பாக இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். 

காலை – மாலை ஒரு தேக்கரண்டி அளவு பொடியை மோருடன் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு எனப்படும் பெரும்பாடு நோய் குணமாகும்.

????  மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ..

➡வெற்றிலை        - 2

➡சாம்பார் வெங்காயம்    - 2

➡சீரகம்        - 1 ஸ்பூன்

➡பூண்டுபல்        - 2 

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும்  காலை மாலை இருவேளை  வெறும் வயிற்றில் 
5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

⭕ வெள்ளைப் பூசணி சாறு????????????

➡வெள்ளைப் பூசணி    - 100 கிராம்

➡வெள்ளரி விதை    - 10 கிராம்

➡சாம்பார் வெங்காயம்    - 2

➡வெள்ளை மிளகு    - 5 கிராம்

➡பூண்டு        - 2 பல்

➡பனங்கற்கண்டு    - 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

⭕ அசோகா கசாயம்????????????

➡அசோகமரப்பட்டை    - 20 கிராம்

➡மருதம்பட்øடை    - 10 கிராம்

➡ஆவாரம் பூ        - 10 கிராம்

➡திரிகடுகு பொடி    - 10 கிராம்

➡திரிபலா பொடி    - 10 கிராம்

இவையனைத்தையும் தூள் செய்து 
1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான அளவிலும் இருக்கும்.

???? கர்ப்பபை மற்றும் சினைப்பை நீர்க்கட்டிக்கு மலை வேம்பு…

⭐பயன்படுத்தும் முறை❓

⭕ மருந்து 1 

▶மலை வேம்பு இலை 10 கிராம் 

▶நிலவேம்பு - 1 கிராம் 

▶கிராம்பு - 4 ( பொடி ) 

▶ஏலக்காய்  - 1 ( பொடி ) 

▶கழற்சிக்காய் - 1 ( பொடி ) (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) 

▶கருப்பட்டி -  தேவையான அளவு 

????செய்முறை❓

மலை வேம்பு இலையுடன் மீதமுள்ள பொடிகளை கலந்து உருண்டை செய்து, மாதவிடாய் நேரத்தில் 7 நாட்களும் 3 வேலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர வேண்டும். 

தொடர்ந்து 3 மாதம் இப்படியாக சாப்பிட வேண்டும்.

⭕ முறை 2

மலை வேம்பு இலையை சாறெடுத்து மாதவிடாய் காலங்களில் மூன்றாவது நாளிலிருந்து 7 வது நாள் வரை அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிக்கும் 10 மில்லி குடிக்க வேண்டும்.

????குறிப்பு 

வேம்பு மரம் என்பது வேறு , மலை வேம்பு என்பது வேறு

???? நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.

????ஒரு முழு வாழைப்பூவை எடுத்து இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

????கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு, ரெண்டா தட்டிப்போட்டு, 
100 மில்லி தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்னை சரியாகும்.

????அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து. 100 மில்லி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாத விடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

????தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்னை சரியாயிரும்.

????இலந்தை இலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணியில போட்டு காய்ச்சி, 100 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்னை சரியாகும்.

????நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.

????வாழைப் பழத்துடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து சாப்பிடவும் அல்லது செம்பருத்திப் பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர ரத்தப் போக்கு கட்டுப்படும்.

????முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

????மாதும்பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

????முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

????மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

????அசோகு மரப்பட்டை 40 கிராம், மாதுளைவேர்பட்டை 20 கிராம் பச்சையாகச் சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி லி வீதம் 3, 4 வேளையாகத் தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாள்பட்ட பெரும்பாடுத் தீரும். 

????இலந்தைப்பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து 
125 மி லி ஆக்கி 4 வேளை தினமும் குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

????அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டையைச் சேர்த்து குடிநீர் செய்துக் காலை, மதியம், மாலை குடித்து வர தீராத பெரும்பாடுத் தீரும்.

????செம்பரத்தை வேர்ப்பட்டை, இலந்தைவேர்ப்பட்டை, மாதுளம் பட்டை சமனளவு சூரணம் செய்து 4 சிட்டிகைக் காலை, மாலை சாப்பிடப் பெரும்பாடுத் தீரும்.

????வில்வ இலையை மையாய் அரைத்துத் கொட்டைப் பாக்களவு கொடுத்துத் குளிர் நீரில் குளித்து வர குணமாகும்.

????ஓதியம்பட்டைக் குடிநீர் 30 மி லி காலை மாலை சாப்பிடப் பெரும்பாடு தீரும்.

????மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட பெரும்பாடுத் தீரும். 

????விளாம்பிசின் உலர்த்தித் தூள் செய்து காலை மாலை 1 சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட குணமாகும்.

????வாழைப்பூ சாற்றைனை பணை வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.

????கொட்டைப்பாக்கை மென்று சாற்றினை முழுங்கலாம்.

????பொட்டு கடலையை நன்றாக மென்று சாப்பிடலாம்.

????மாதுளை பிஞ்சு அறைத்து குடித்தால் வடிகட்டி மோர் களந்து குடித்தால் அதிக உதிரப் போக்கு நிர்க்கும்.

????மாதுளை தோலினை காய்ச்சி வடிகட்டி குடிப்பதாலும் அதிக உதிரப் போக்கினை தடுக்கலாம்.

????சோற்று கற்றாழையை நறுக்கி 7 முறை அவற்றை தண்ணிரில் கழுவி பனங்கற்கண்டுடன் சேர்த்து உன்பதால் உதிரப்போக்கினை கட்டுக்குள் வரும். மேலும் இது அதிக வெள்ளை படுதலையும் சரி செய்யும்.

????ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.

❌காரம், புளி நீக்கி உணவு கொள்ள வேண்டும்.

                       FOUNDER GREEN Village FOUNDATION

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close