சாதாரண தையல்சிட்டு (Common tailorbird)

சாதாரண தையல்சிட்டு (Common tailorbird)

 

சாதாரண தையல்சிட்டு (Common tailorbird, அறிவியல் பெயர்: Orthotomus sutorius) என்பது வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு பாடும் பறவை ஆகும். இலைகளை வைத்து கூட்டை உருவாக்குவதற்காக இது பிரபலமாக உள்ளது. இது இரட்யார்ட் கிப்ளிங்கின் ஜங்கிள் புக் புத்தகத்தில் டார்சி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றுள்ளது. இது நகர்ப்புற தோட்டங்களில் காணப்படும் ஒரு பொதுவான பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்தப் பறவைகள் தாவரங்களுக்கு இடையில் மறைந்து காணப்படும். இவற்றின் சத்தமான அழைப்புகள் பொதுவாக கேட்க கூடியவையாகும். இந்த அழைப்புகள் இவற்றை எளிதாக காட்டிக் கொடுத்து விடுகின்றன. இவற்றின் நிமிர்ந்த வால், பச்சை நிற மேல் உடல் சிறகுகள், துரு நிற நெற்றி மற்றும் தலை ஆகியவற்றால் இவை தனித்துவமான தோற்றத்துடன் காணப்படும். இந்த பறவை பொதுவாக திறந்த வயல்வெளி, புதர், காட்டின் விளிம்புகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும். இவற்றின் கூட்டை அமைக்கும் முறை காரணமாக இவை தையல்சிட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பெரிய இலைகளின் விளிம்புகள் துளையிடப்பட்டு அவை தாவர நார் அல்லது சிலந்தி வலையால் தைக்கப்பட்டு தொட்டி உருவாக்கப்பட்டு அவற்றில் இவை கூட்டை அமைக்கின்றன.
Photo: Raveendran Natarajan, Madurai.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close