உருமாறும் வில்லன் (Grasshoppers v/s Locusts )

உருமாறும் வில்லன் (Grasshoppers v/s Locusts )

 

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க.. இப்ப ஏதோ  locusts னு சொல்றோமே ஏன் என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். சிலர் `அட ரெண்டும் ஒன்னு தான் பா இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம் `என்று சொல்லலாம்.. இந்த கும்பலாக வரும் மஞ்சள் வெட்டுகிளிகள் திடீரென வருகின்றனவே இவ்வளவு நாள் இவைகள் எங்கே இருந்தன என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வெட்டுகிளிகள் படையெடுப்பு என்பது வரலாற்றில் புதிது அல்ல கி.மு வில் இருந்தே பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன.

Grasshopers.. locusts.. இவை இரண்டும் ஒன்றா..?

ஆம் இவை இரண்டும் ஒன்னு தான். ஆனால் ஒன்னு இல்லை. Grasshopers களின் உருமாறிய சூப்பர் வில்லன் வடிவம் தான் locust. பொதுவாக நாம் கூறும் கிராஸ் ஹோபார்ஸ்களை நாம் அவ்வபோது வயவெளிகளில் பார்த்து இருக்கலாம் அவைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். மேலும் அவைகள் கூட்டம் சேராமல் தனி தனியாக இருப்பதை தான் பார்த்து இருப்போம். பெரும்பாலும் அவைகளை நாம் பறந்து சென்றே பார்த்திருக்க மாட்டோம் குதித்து குதித்து சென்று தான் பார்த்திருப்போம் ஆனால் வயல்வெளிகள் மீது கும்பலாக படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். அசால்டாக பல நூறு கிலோமீட்டருக்கு பறந்து செல்வதையும் பார்க்கலாம்.

இவைகள் க்ராஸ்ஹோபார்ஸ் கள் இல்லையா ? என்றால் இவைகள் ஒரு காலத்தில் க்ராஸ் ஹோபராய் இருந்து பின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த வில்லன் வடிவில் மாறி விட்டவைகள் . (பரிணாம வளர்ச்சியுடன் குழப்பி கொள்ள வேண்டாம். இது பரிணாம வளர்ச்சி அல்ல ) அவை ஏன் அப்படி மாறுகின்றன ? எப்போதும் அனைத்து க்ராஸ்ஹோபர்ஸ்ர்ஸ்களும் இப்படி லோகஸ்ட் ஆக மாறுமாஎன்றால் இல்லை. மிக சில தருணங்களில் மட்டுமே இந்த க்ராஸ் ஹோபார்ஸ்களில் வில்லன் மாற்றம் நடக்கிறது. அது ஏன் எப்படி எதனால் நடகிறது என்று பார்த்தால்....

பொதுவாக வெட்டுக்கிளிகள் தனித்து வாழக்கூடியவை. முட்டைகள் இட்டு அவற்றில் இருந்து வரும் குட்டி வெட்டு கிளிகள் இதே போல தனித்து பச்சை நிறத்தில் இருக்கும் வெட்டுக்கிளி ஆக வளர்பவை. ஆனால் மிகச் சில தருணங்களில் இது நடக்கிறது. தனியாக இருக்க வேண்டிய வெட்டுக்கிளிகள் கும்பலாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. உணவு தேவை அதிகம் மக்கள் தொகையோ அதிகம் என்கிற சூழலை வெட்டுக்கிளிகள் எதிர்கொள்ள நேர்கிறது. சில நேரங்களில் இவைகள் உணவு தேவை ,வறட்சியை எதிர்கொள்கின்றன. அப்போது கும்பலாக வாழும் வெட்டுகிளிக்கு உடம்பில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. அது ஒரு உயிர்காக்கும் உள்ளுணர்வு என்று சொல்லலாம். ` நாம இப்படியே இருந்தா செத்துப் போய் விடுவோம் நாம உயிர் வாழனும்னா நாம வேற மாறி மாறி ஆகணும் ` என்று அவைகளுக்குள் உள்ளுணர்வு கட்டளையிடுகிறது.

கும்பலாக வாழும் போது ஒரு வெட்டு கிளி அடுத்த வெட்டு கிளியை பார்க்கிறது .. முகர்கிறது மேலும் பின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொட நேருகிறது. இந்த செயல்களால் அவைகள் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் சுரக்க வைக்க படுகிறது.அந்த ஹார்மோன் சுரக்க சுரக்க படி படியாக வெட்டுகிளிகள்  உருமாறுகிறது.

பச்சையாக இருந்த உடல் இப்போ மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. ரக்கைகள் முன்பை விட வேறு மாதிரி பலமாக .. நீண்டதூரம் பறப்பதற்கு  ஏற்றமாதிரி மாறுகிறது. க்ராஸ் ஹோபர் ரக்கைகள் இரண்டடுக்கு மெல்லிய ரக்கைகள் கொண்டிருக்கும் ஆனால் locust ரக்கைகள் நீண்டு வலிமையான வடிவாக மாறுகிறது.அவைகளின் பார்க்கும் திறன் முகரும் திறன் எல்லாமே அப்பாவி to சூப்பர் வில்லன் நிலைக்கு நிலைமாற்றம் அடைகிறது. சொல்ல போனால் இவைகளின் மூளை கூட அளவில் பெரிதாக மாறுகிறது. இந்த மாற்றம் இரண்டு மூன்று கட்டமாக நடக்கிறது..உடல் உருவ அளவில் கொஞ்சம் முன்பை விட தன்னை சுருக்கி கொள்கின்றது.

ஒரு grass hoppers தனித்து மட்டுமே இருக்கும் ஆனால் ஒரு locust  கும்பலாக சமூக விலங்காகவும் வாழ முடியும்இப்போது இவைகள் கும்பலாக ஒற்றுமையாக வலிமை மிக்கவையாக நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கின்றன. அவைகள் செல்லும் பாதைகளில் உள்ள பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்து போகும் வழி பூராவும் அழிவை தடயமாக விட்டு செல்கின்றன.

பொதுவாக இந்த மாதிரி வெட்டுக்கிளிகளின் இடமாற்றம் என்பது பருவ மாறுதல் மழை பொழிவு.. காற்று திசை இவைகளை பொறுத்து உண்டாகிறது. குறிப்பாக பாலைவனப் பகுதியில்  வரட்சிகள் மிகுந்து  உணவு குறைவாக பற்றாக்குறையாக  இருக்கும் தருணங்களில்  வெட்டுக்கிளிகள் முட்டையிட  நேர்ந்து இருக்கும் சமயங்களில் இந்த உருமாறும் வில்லன்கள் உருவாகின்றன. இவைகள் காற்றை பின் தொடர்ந்து தனது பாதையை அமைக்கின்றன என்பதால். ஓரளவு இவைகள் செல்ல போகும் பாதையை நம்மால் கணிக்க முடியும். இயல்பாக வாழ சூழல் இல்லாத போது காலத்துக்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொண்டு உயிர்வாழும் சக்தி பொதுவாகவே விலங்குகளுக்கு பூச்சிகளுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த வெட்டுகிளிகள் அதை தான் செய்கின்றன.

இவைகள் கடந்து செல்லும் இடங்களில் பயிர்கள் பெரிய அளவில் நாசம் செய்து விவசாயிகளை கதற விடுகின்றன.உணவு உற்பத்தி குறைவதால் உண்டாகும் chain reaction களுக்கு காரணமாகின்றன. இவைகளை அடக்க சிறந்த வழி பறவைகள் .

பறவைகள் தான் இந்த வில்லன்களை தட்டி கேட்கும் சூப்பர் ஹீரோஸ்கள். இவைகளை தின்று தீர்க்கும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து போனால் இவைகள் தட்டி கேட்க ஆள் இல்லாமல் அட்டகாசம் செயகின்றன.. (குருவிகள் சாகும் போது குருவி செத்தா நமக்கு என்ன என்று இருந்த மனிதர்கள் இப்போது கொஞ்சம் சங்கிலி தொடர் விளைவு பற்றி உணரலாம் )

இதை தவிர தகுந்த ராசயணங்கள்  மூலம் இவைகளை கட்டு படுத்தலாம்மற்றும் இவைகள் உடலில் சுரக்கும் சேரடோனியம் தான் இவைகளின் வில்லன் நடத்தைக்கு காரணம் என்பதால் அதற்கு எதிரான கெமிக்கல் தெளிப்பது மூலமாகவும் இவைகளை கட்டு படுத்தலாம்.

சரி இந்த வெட்டுகிளிகளை காப்பான் படத்தில் வருவது போல மனிதர்களே உருவாக்க முடியுமா ? என்றால் விடை ஆம் நிச்சயம் முடியும்.

Paul Driessen இவர்  the Committee for a Constructive Tomorrow (CFACT) and the Center for the Defense of Free Enterprise இல்

சீனியர் பாலிசி அட்வைசராக இருப்பவர்... கிழக்கு ஆப்ரிக்காவில்  Kenya, Ethiopia, Eritrea, Djibouti மற்றும்  Somalia வில் வெட்டுகிளிகள் 70 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிப்பை உண்டு பண்ணிய போது. இது ஒரு man made என்று அவர் அறிவித்தார்.

அவர் கூறுகிறார்..". Economic development organizations and activist nongovernmental organizations have foisted "agroecology" on the poorest nations — an organic-style agriculture.

இது மனித உருவாக்கமோ அல்லது இயற்கையின் உருவாக்கமோ ஆனால் ஒன்று நிச்சயம் மனிதன் தன்னை மிகப்பெரிய மாற்றத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையேல் டார்வின் சொன்ன `தகுதியுள்ளவை` லிஸ்டில் மனிதன் பெயர் இருப்பது சந்தேகம்தான்.

Article By: அறிவியல் காதலன் -ரா.பிரபு 

Post By : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close