கொண்டலாத்தி குருவியை எழுத்தாணிக் குருவி, சாவல்குருவி, புளுக்கொத்தி, கொண்டை வளர்த்தி, கொண்டை உலர்த்தி, விசிறிக்கொண்டைக் குருவி என்றும் அழைப்பர். கட்டிடங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் இடையில் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும் பறவை இது . இதன் அலகு நீண்டு இருப்பதால் இதனை மரங்கொத்தி என மக்கள் தவறாக கருதுவர். உண்மையில் இது மண்ணின் உள் வண்டுகளும், கரையான்களும் அமைக்கும் புற்றுகளில் தன் நீண்ட அலகினை நுழைத்து அவற்றின் இளம் பருவ புழுக்களை உணவாக உண்கின்றன. அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.
Article & Photo: Raveendran Natarajan, Madurai.
No. of Trees Planted