உலகநீதிநாள் - International Justice Day

உலகநீதிநாள் - International Justice Day

 

உலக நீதி நாளாக ஜூலை 17 ம் தேதி .நா.வால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக நீதி நாளாக ஒருநாள் கொண்டாடப்படுவதன் மூலம் உலகம் முழுவதும் நீதியின் அவசியம் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனாலும், நீதி எந்த தடையும் இல்லாமல் வலம் வருவதில்லை.  அநீதிகள் வியாபிப்பதும் அதை நீதி ஒருநாள் வெல்வதும் மாறிமாறி நடந்து வருகிற செயல்தான் இங்கு நாம் காணும் வாழ்க்கை.

கேள்வி எழுந்தால்தான் அதுக்கு பதில் தேட முடியும் என்பதுபோல அநீதி ஏற்படும்போதுதான் அதை வெல்லும் நீதியை ஒருநாள் நாம் தரிசிக்க முடிகிறது.

 

உலக நீதி நாள் எதற்காக?

எல்லா நாட்டு மக்களிடமும் நீதியின் மீது நம்பிக்கை ஏற்படவும். ஒரு நாட்டின் மீதே அநீதி திணிக்கப்பட்டாலும், ஒரு நாட்டின் ஆட்சியாளர்களே குற்றவாளிகளின் அபிமானிகளானாலும், நீதி கேட்பவர்கள் நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்க, நாடுகளைக் கடந்தும் உலக அளவிளான ஒரு நீதியை பெற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்று உண்டு என்பதை நினைவுபடுத்தும் நாள்.

 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

உலக நீதி நாள் ஜூலை 17 ம் தேதி கொண்டாடப்படுவதற்கு காரணம் என்னவென்றால், அன்றுதான் ரோமில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை 1998 ம் ஆண்டு ஜூலை 17 ல் ஏற்பட்டது.  அப்போது இதற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்தன. எதிராக, ஈராக், லிபியா, இஸ்ரேல் கத்தார், ஏமன், சீனா மக்கள் குடியரசு, மற்றும் அமெரிக்கா உட்பட்ட 7 நாடுகளும் வாக்களித்தன.

 

ரோமின் சட்ட உடன்படிக்கையின்படி சர்வதேச அளவிலான குற்றங்களுக்கு அந்த மாநிலங்கள் அல்லது நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலோ, அல்லது விரும்பாத பட்சத்திலோ ரோமில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே அதற்கான நீதிபரிபாலனையை செய்யும்.

 

அதிக எண்ணிக்கையிலான சர்வதேசக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர்.  அதற்கு, அந்த மாநிலங்களுடைய அணுகுமுறையில் உள்ள பலவீனமும் காரணம். அதனால், ஒரு நாட்டினுடைய உள் விவகாரங்களின் கட்டமைப்புகள் வலிமை அடைந்திருந்தாலே சர்வதேசக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதை தடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகள் வகுக்கும் நாளாக இந்த உலக நீதி நாள் அமையட்டும்.

 

உலகின் பல்வேறு வன்முறை சம்பவங்களில் அநீதி தலை தூக்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், அந்த அநீதியை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்பது உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்படி அவர்கள் தண்டிக்கப்படாத போது, உலகின் பாதுகாப்பு அமைப்புகள் நொறுங்கியதாகி விடுகிறது. நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம், சந்திப்புகள், புரிதல்கள் எல்லாமே போலியானது ஆகிவிடுகிறது.

 

உலக நீதி நாளில் என்ன செய்யலாம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஒரு நாட்டுக்குள் நடக்கும் இனப்படுகொலைகள், நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கலாம். மேலும், அதற்கு தீர்வு காணும் வழிகளை தேடும் விவாதங்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக, இந்த நாளில் உலக நீதி பற்றிய கருத்தை எடுத்துரைக்கலாம்.

நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முடிவுக்கு வராமல் காஷ்மீர் பிரச்சனைபோல நீடிப்பதற்கு காரணம், அதில் உள்ள நீதியை கண்டுபிடிப்பதற்கான தாமதமல்ல. ஒரு பிரிவினருக்கு நீதியாக தெரிவது இன்னொரு பிரிவினருக்கு அநீதியாக கருதும் மனோபாவமும் அரசியல் நெருக்கடிகளும்தான். உலக நீதி நாளை கொண்டாடுவோம்! உலக நீதியை காப்போம்!

 

World Day for International Justice, also referred to as Day of International Criminal Justice or International Justice Day, is an international day celebrated throughout the world on July 17 as part of an effort to recognize the emerging system of international criminal justice. July 17 is the date of the adoption of the treaty that created the International Criminal Court. On 1 June 2010, at the Review Conference of the Rome Statute held in Kampala (Uganda), the Assembly of State Parties decided to celebrate 17 July as the Day of International Criminal Justice. Each year, people around the world use this day to host events to promote international criminal justice, especially support for the International Criminal Court.

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close