பச்சைப்புறா - Yellow-Footed Green Pigeon - Treron phoenicoptera

பச்சைப்புறா - Yellow-Footed Green Pigeon - Treron phoenicoptera

 

பச்சைப்புறா என்பது காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா இனமாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. இப்பறவை மகாராட்டிர மாநிலப் பறவையாகும். இப்புறா நாட்டுப்புறா பருமன் உள்ளதாகவும், இதன் உடல் மஞ்சள், ஊதாப்பச்சை, சாம்பல் வெளுப்பு கலந்த நிறமுடையது. இவை காடுகளிலும், பிடித்தமான பழங்கள் உள்ள தோட்டங்களிலும் காணப்படும். தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகளைச் சார்ந்து பழமரங்கள் பழுக்கும் பருவத்திற்கேற்ப இடம் மாறித் திரிவது. வீட்டுத் தோட்டங்கள், சாலை ஓர மரங்கள், தோப்புகள் ஆகியவற்றைச் சார்ந்து 5 முதல் 10 வரையான கூட்டமாகத் திரளக் காணலாம். பழம் உள்ள சிமிர்களில் கிளிகளைப் போல பக்கவாட்டிலும் தலைகீழாகவும் தொங்கியபடி தூரி ஆடி அருகில் உள்ள சிமிரில் உள்ள பழத்தைக் கவ்வப் பார்க்கும். தொண்டை நிறையப் பழங்களை அடக்கிக் கொள்ளும் பழக்கம் உடையவை. காலையிலும் மாலையிலும் உயரகிளைகளில் துணையோடு அமர்ந்து வெயில்காயும் பழக்கம் கொண்டது. மார்ச் முதல் ஜுன் வரை வெளியே தெரியாதபடி இலைகள் நிறைந்த கிளைகளில் குச்சிகளால் மேலை அமைத்து 2 முட்டைகள் இடும்.

 The yellow-footed green pigeon (Treron phoenicoptera), also known as yellow-legged green pigeon, is a common species of green pigeon found in the Indian subcontinent. It is the state bird of Maharashtra. In Marathi it is called Hola or Hariyal. The species feeds on fruit, including many species of Ficus. They forage in flocks. In the early morning they are often seen sunning on the tops of emergent trees in dense forest areas. They especially are found sitting in couples on tree branches.

Source BY : Wikipedia

Photo BY : Raveendran Natarajan, Madurai

Article By : Naveen Krishnan, Thuraiyur

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close