ராணியாவது அவ்வளவு சுலபமல்ல! நான் இங்கே சொல்ல வருவது ராணித்தேனீக்களைப்பற்றியது. தேனீக்களின் குடும்பத்தில் மூன்று வகையான அங்கத்தினர்கள் உண்டு. ராணித்தேனீ, டிரோன்ஸ் எனும் ஆண் தேனீக்கள், மலட்டுத்தன்மை வாய்ந்த வேலைக்காரத்தேனீக்கள். ஒரு கூட்டில் மலர்கள் பூத்துக்குழுங்கும் காலங்களில் ஒரு லட்சம் தேனீக்கள் கூட இருக்கும். தேனீக்கள், எறும்புகள் மற்றும் குளவிகளை சமுதாயப்பூச்சிகள் என்றழைப்போம். ஹைமனாப்டிரா வகையைச்சேர்ந்தது. டிவிசன் ஆஃப் லேபர் இவைகளின் சிறப்புத்தகுதி. மனிதர்களுக்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே கூடி வாழ்ந்த உயிரினங்கள்.
ஒரு கூட்டுக்கு ஒரு ராணித்தேனீ தான் இருக்கும். தப்பித்தவறி இரண்டாவது ராணித்தேனீ உருவானால் இரண்டும் சண்டையிட்டு வெற்றி பெற்றது ராணியாக முடி சூட்டிக்கொள்ளும். வேலைக்காரத்தேனீக்கள் ராணித்தேனீயின் வாசனையை வைத்தே தன் கூட்டை இனங்காணும். ராணித்தேனீ அசாதரண சூழ்நிலையில் கொல்லப்பட்டால் மொத்தக்கூடும் நிலைகுலைந்து போகும். வேலைக்காரத்தேனீக்கள் கூட்டின் அருகிலேயே உணவு தேட மறந்து வயிறு கருத்து மரித்துப்போகும். உணவில்லாத்தால் லார்வாக்களும், ஆண் தேனீக்களும் அடுத்தடுத்து மரித்துப்போகும். அத்தனை சக்தி வாய்ந்தது ராணித்தேனீ.
ராணித்தேனீயாக உருவாக்கப்படும் லார்வாக்களுக்கு பிரதான உணவாக ராயல் ஜெல்லி வேலைக்காரத்தேனீக்களால் ஊட்டப்படும். மற்ற லார்வாக்களுக்கு தேனீ ரொட்டி. வேலைக்காரத்தேனீக்கள் சுமாராக பத்து லார்வாக்களை தெரிவு செய்து ராயல் ஜெல்லியை ஊட்டிவிடும். இந்த பத்தில் ஒன்று வலுவாக வளரும். ஒரு ராணித்தேனீ தான் உருவாக்கமுடியும் என்பதால் ராணித்தேனீ தனது கொடுக்குகள் கொண்டு மற்றவற்றை கொட்டியே கொன்றுவிடும். ஏனென்றால் ராணியின் ஆயுள் அப்படி! அதிகபட்சமாக ஏழு வருடங்கள் வரை வாழும். ராணித்தேனீ தன் வாழ்நாளில் பல தலைமுறைகளைக்காணும். மற்ற அங்கத்தினர்களுக்கு சொற்ப ஆயுளே! வேலைக்காரத்தேனீக்கள் ஆறு முதல் ஏழு வாரங்கள் வரை வாழும். ஆண் தேனீக்கள் ஒரிரு மாதங்கள் கூடுதலாக வாழலாம். ராணித்தேனீயுடன் கூடிய பின்னர் இறந்துவிடும். வேலைக்காரத்தேனீக்கள் எதிரியைக்கொட்டும் போது இறந்துவிடும். அதனால் ஆயுள் முன்னே பின்னே இருக்கும்.
Share :
Tags :
#honeybee #honey #bee #bees #beekeeping #savethebees #beekeeper #nature #honeybees #honeycomb #beehive #apiary #beesofinstagram #beekeepers #beekeeperslife #pollen #naturephotography #rawhoney #apismellifera #macro #apiculture #urbanbeekeeping #biene #bienen #hive #flowers #bhfyp#purehoney #insects #honig #pollinators #queenbee #beekeepersofinstagram #localhoney #beeswax #honeybar #insect #beekeeperlife #spring #love #gnf #globalnaturefoundation