முகக்கவசங்கள் - ஒரு முன்னெச்சரிக்கை!

முகக்கவசங்கள் - ஒரு முன்னெச்சரிக்கை!

 

முகக்கவசங்கள் ஒரு முன்னெச்சரிக்கை!

குறைந்தபட்சம், இன்னும் ஒரு வருடத்திற்கு, பொது இடங்களில், அலுவலகங்களில், முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதலில் வீட்டிலேயே காட்டன் துணியில் தைத்து பயன்படுத்தினோம்.

பின்னர், பனியன் துணியால் தைக்கப்பட்ட முகக்கவசங்கள் விதவிதமான வண்ணங்களில் மருந்துக்கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்க தொடங்கின. அதை வாங்கி பயன்படுத்துகிறோம்.

சமீபத்தில், 3 அடுக்குகள் கொண்ட காட்டன் துணியில் தயாரான முகக்கவசம் 2 வாங்கினேன். அதன் வெளிப்புறம் வலைபோன்ற அமைப்பு. உள்புறம் வெறும் பனியன் துணி. ஒன்றின் விலை ரூ.115.  

சுவாசிப்பதற்கு பயன்படுத்த இருந்ததால், புதிய முக்கவசங்களை, நன்றாக கொதிக்க வைத்த வெந்நீரில் சில நிமிடங்கள் போட்டு வைத்தேன்அப்போது முகக்கவசத்தின் 3 அடுக்குகளுக்குள் தேங்கி இருந்த நுால் துகள்கள் நீரில் மிதந்து வெளியே வந்து பாத்திரத்தில் தேங்கின.

நல்லவேளை, புதிய முக்கவசத்தை அப்படியே அணிந்திருந்தால், ஒருவேளை, அவை சுவாசக்குழாய்க்குள் சென்றிருக்கும்?.

பல இடங்களில் சாலை ஓரங்களில், மளிகைப்பொருள் குவியல்களுக்கு இடையில் முகக்கவசங்கள் குவித்து விற்கப்படுகின்றன.

துணி முகக்கவசங்களாக இருந்தால், அதை முதல்முறையோ அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு நாளும் வென்னீரில் அலசி, மின்விசிறி காற்றில் உலர்த்தி பயன்படுத்துவது நல்லது என கருதுகிறேன்.

உங்களுக்கு பயன்தரும் என்றால் பினபற்றிப் பாருங்களேன்!

அதேபோலத்தான், அடுக்குமாடி ஆடையகங்களில், டிரையல் ரூமில் பலரும் அணிந்து பார்த்து கழற்றி வீசிய ஆடை குவியல்களை பார்த்தும் பல நாட்கள் மனம் திடுக்கிட்டது.

ஒரு ஆடை வாங்க வருபவர்கூட, ஒவ்வொரு முறையும் 4 செட் ஆடைகளை எடுத்து அணிந்து பார்த்து, செல்பி எடுத்துக் கொண்டு திருப்பி தந்துவிட்டு செல்வார்கள். அவர்கள் சென்றதும், மீண்டும் அவை மடிப்பு கலையாமல் மடிக்கப்பட்டு செல்புக்கு செல்லும்.

அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று பல நாட்கள், பல மாதங்கள் இப்படியே பலர் மேனியையும் தழுவி நழுவிய ஆடைகள், கடைசியில் யாருக்கோ உரிமையுடையதாகும்.

அதை பார்த்த நாள் முதல், கர்ச்சீப் தொடங்கி, புதிய ஆடைகள் எது வாங்கினாலும் அவற்றை துவைத்தே பயன்படுத்த தொடங்கிவிட்டேன்.

அது பண்டிகையாக இருந்தாலும்.

Article By : சேது,Chennai. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close