தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

 

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!                                                                                         

உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும்.        

எனர்ஜி கிடைக்கும்: உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.  

  கழிவுகளை வெளியேற்றும்: அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

 உடல் வெப்பத்தை சீராக வைக்கும்: உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்.

மெட்டபாலிசம் அதிகமாகும்: உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.

தசைப்பிடிப்புகளை தடுக்கும்: 80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்.

 முறையான குடலியக்கம்: நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பொலிவான சருமம்: முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

அசிடிட்டியை குறைக்கும்: பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்.

மூளை செயல்பாடுகள்: மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.

மூட்டு உராய்வைத் தடுக்கும்: உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு: உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

 எடை குறைப்பதற்கு: தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

Source By : https://tamil.boldsky.com

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close