மலை மைனா (Common hill myna) பொதுவாக மைனா என்ற குடும்பத்தைச் (Starling) சார்ந்தது ஆகும். இப்பறவை தோற்றத்தில் சாதாரண மைனாவிலிருந்து வேறுபடுகிறது. இப்பறவை தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் மலைப்பகுதியையும் பூர்வீகமாகக் கொண்டது. இது சத்தீசுகர் மாநிலப்பறவையாகும். இதன் தலைப்பகுதிக்கும் கேழே கழுத்துப்பகுதி சற்று சதைப்பிடிப்புடன், ஆரஞ்சு-மஞ்சள் திட்டுக்களுடன் சாதாரன மைனாவை விட வேறுபட்டுக் காணப்படுகிறது. இதன் தோகை உடல் முழுவதும் பளபளப்பான கரும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தலை மற்றும் கழுத்திலும் ஊதா நிறம் கொண்டு தோற்றமளிக்கிறது. இதன் ரெக்கைகள் இரண்டும் வெள்ளை நிறத்தில் பெரியதாக இருக்கும் ஆனால் அமர்ந்திருக்கும் போது மூடப்பட்டு இருக்கும். இதன் அலகுப்பகுதியும், கால் பகுதியும் உருதியாக உள்ளது. அதன் பிடரியிலும், கண்ணின் கீழ் பகுதியிலும் மஞ்சள் நிறம் உள்ளது. பொது மைனாவிலிருந்தும், ஏரி மைனாவிலிருந்தும் இதன் கண் ஓர வட்டம் வேறுபட்டிருக்கும். இவற்றில் ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதறியாகக் காணப்படுகிறது. இவற்றில் ஏழு முதல் எட்டு கிளை இனங்கள் காணப்படுகின்றன. இந்த மைனா இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள குமாயன் பிரிவு (80 ° கி தீர்க்கரேகை முதல் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள நேபாளம், சிக்கிம், பூடான் மற்றும் அருணாசலப் பிரதேசம், மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சில பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பிலிப்பைன்ஸ், வடக்கு இந்தோனேசியா, தெற்கு சீனா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இவை மரத்தின் பொந்துகளில் மூன்று அல்லது நான்கு முட்டைகளிட்டி குஞ்சு பொரிக்கிறது. இப்பறவையின் குரல் ஒலிக்காகவும் இதன் தோற்றத்திற்காகவும் செல்லபிராணியாக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இப்பறவை அறிதானதாக இருப்பதால் குஞ்சுபொரித்தவுடன் நேரடியாக வீடுகளில் கொள்முதல் செய்யப்பட்டு வர்த்தகம் நடக்கிறது. இதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் பாதுகாக வேண்டிய இனம் என்ற இடத்தில் வைத்துள்ளது.
The Common hill myna (Gracula religiosa), sometimes spelled "mynah" and formerly simply known as hill myna or myna bird, is the myna most commonly seen in aviculture, where it is often simply referred to by the latter two names. It is a member of the starling family (Sturnidae), resident in hill regions of South Asia and Southeast Asia. This is a stocky jet-black myna, with bright orange-yellow patches of naked skin and fleshy wattles on the side of its head and nape. It is overall green-glossed black plumage, purple-tinged on the head and neck. Its large, white wing patches are obvious in flight, but mostly covered when the bird is sitting. The bill and strong legs are bright yellow, and there are yellow wattles on the nape and under the eye. These differ conspicuously in shape from the naked eye-patch of the common myna and bank myna (A. ginginianus). Both sexes can produce an extraordinarily wide range of loud calls – whistles, wails, screeches, and gurgles, sometimes melodious and often very human-like in quality. Each individual has a repertoire of three to 13 such call types, which may be shared with some near neighbours of the same sex, being learned when young. Dialects change rapidly with distance, such that birds living more than 15 km apart have no call-types in common with one another. This myna is almost entirely arboreal, moving in large, noisy groups of half a dozen or so, in tree-tops at the edge of the forest. It hops sideways along the branch, unlike the characteristic jaunty walk of other mynas. Like most starlings, the hill myna is fairly omnivorous, eating fruit, nectar and insects. They build a nest in a hole in a tree. The usual clutch is two or three eggs. There is no sexual dimorphism in these birds, which results in a limited possibility of choosing the sex to work with for mating.
Source By : Wikipedia
Share :
Tags :
#மலை_மைனா #Common_hill_myna #Gracula_religiosa #Birds_of_india #birds #mynah #photography #wild_photography #bird_photography #Indian_birds