மோல் நாள் - Mole Day

மோல் நாள் - Mole Day

 

மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.

 

1980களில் சயன்சு டீச்சர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் முதற்தடவையாக மோல் நாள் பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.[4] இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட மோரிசு ஓலெர் என்ற விஸ்கொன்சின் மாநில வேதியியல் ஆசிரியர் 1991 மே 15 ஆம் நாள் தேசிய மோல் நாள் நிறுவனத்தை (National Mole Day Foundation NMDF) ஆரம்பித்தார்.

 

அமெரிக்க ஐக்கிய நாடு, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் வேதியியல் அல்லது மோல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்நாளில் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பல பாடசாலைகள் இக்காலப்பகுதியை மோல் வாரமாகவும் கொண்டாடுகின்றன. அமெரிக்க வேதியியல் குமுகம் தேசிய வேதியியல் வாரமாகக் கொண்டாடுகின்றது.

 

Mole Day is an unofficial holiday celebrated among chemists, chemistry students and chemistry enthusiasts on October 23, between 6:02 a.m. and 6:02 p.m., making the date 6:02 10/23 in the American style of writing dates. The time and date are derived from the Avogadro number, which is approximately 6.02×1023, defining the number of particles (atoms or molecules) in one mole (mol) of substance, one of the seven base SI units. Mole Day originated in an article in The Science Teacher in the early 1980s. Inspired by this article, Maurice Oehler, now a retired high school chemistry teacher from Prairie du Chien, Wisconsin, founded the National Mole Day Foundation (NMDF) on May 15, 1991.

 

Many high schools around the United States, South Africa, Australia, and Canada celebrate Mole Day as a way to get their students interested in chemistry, with various activities often related to chemistry or moles.

 

The American Chemical Society sponsors National Chemistry Week,[1] which occurs from the Sunday through Saturday during which October 23 falls. This makes Mole Day an integral part of National Chemistry Week.

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close