சூரிய கிரகணம் - Solar eclipse

சூரிய கிரகணம் - Solar eclipse

 

கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே அமாவாசை நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன. இக்கதிரவ மறைப்பு அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை. கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும்.

கதிரவ மறைப்பில் நான்கு வகைகள் உள்ளன. அவைமுழுமையான கதிரவ மறைப்பு- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.

வளையக் கதிரவ மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.

கலப்பு கதிரவ மறைப்பு- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.

    பகுதி கதிரவ மறைப்பு- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.

 

A solar eclipse occurs when a portion of the Earth is engulfed in a shadow cast by the Moon which fully or partially blocks sunlight. This occurs when the Sun, Moon and Earth are aligned. Such alignment coincides with a new moon (syzygy) indicating the Moon is closest to the ecliptic plane. In a total eclipse, the disk of the Sun is fully obscured by the Moon. In partial and annular eclipses, only part of the Sun is obscured. If the Moon were in a perfectly circular orbit, a little closer to the Earth, and in the same orbital plane, there would be total solar eclipses every new moon. However, since the Moon`s orbit is tilted at more than 5 degrees to the Earth`s orbit around the Sun, its shadow usually misses Earth. A solar eclipse can only occur when the Moon is close enough to the ecliptic plane during a new moon.

There are four types of solar eclipses:

  A total eclipse occurs when the dark silhouette of the Moon completely obscures the intensely bright light of the Sun, allowing the much fainter solar corona to be visible. During any one eclipse, totality occurs at best only in a narrow track on the surface of Earth. This narrow track is called the path of totality.

An annular eclipse occurs when the Sun and Moon are exactly in line with the Earth, but the apparent size of the Moon is smaller than that of the Sun. Hence the Sun appears as a very bright ring, or annulus, surrounding the dark disk of the Moon.

A hybrid eclipse (also called annular/total eclipse) shifts between a total and annular eclipse. At certain points on the surface of Earth, it appears as a total eclipse, whereas at other points it appears as annular. Hybrid eclipses are comparatively rare.

A partial eclipse occurs when the Sun and Moon are not exactly in line with the Earth and the Moon only partially obscures the Sun. This phenomenon can usually be seen from a large part of the Earth outside of the track of an annular or total eclipse. However, some eclipses can only be seen as a partial eclipse, because the umbra passes above the Earth`s polar regions and never intersects the Earth`s surface. Partial eclipses are virtually unnoticeable in terms of the Sun`s brightness, as it takes well over 90% coverage to notice any darkening at all. Even at 99%, it would be no darker than civil twilight. Of course, partial eclipses (and partial stages of other eclipses) can be observed if one is viewing the Sun through a darkening filter (which should always be used for safety).

Eclipses may cause the temperature to decrease by 3 °C, with wind power potentially decreasing as winds are reduced by 0.7 m/s.

In addition to the drop in light level and air temperature, animals change their behavior during totality. For example, birds and squirrels return to their nests and crickets chirp.

Source By : Wikipedia

Article By : Bhuvana Naveen, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close