ஊர்வன என்றால் என்ன? What is called reptile?

ஊர்வன என்றால் என்ன? What is called reptile?

 

நிலத்தில் வாழும் முதுகெலும்புள்ள நான்கு வகை விலங்குகளில் ஊர்வனங்களும் ஒன்றாகும். மற்றவை தரையிலும், தண்ணீரிலும் வாழக்கூடிய தவளைகள் போன்ற இருவாழ்விகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள். இருவாழ்விகளிலிருந்து ஊர்வனங்கள் தோன்றின. ஊர்வனங்களிலிருந்து பறவைகள் மற்றும் பாலூட்டிகள் தோன்றின. ஊர்வனங்கள் வறண்ட செதில்களால் மூடப் பட்ட தோல் பெற்றிருப்பதால் இருவாழ்விகளிலிருந்தும், இறக்கைகள் இல்லாமல் இருப்பதால் பறவைகளிலிருந்தும், உரோமம் இல்லாமல் இருப்பதால் பாலூட்டிகளிலிருந்தும் வேறுபட்டுள்ளன. 30 கோடி ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக ஊர்வனங்கள் இப்பூமியில் தோன்றின. அப்போது தோன்றிய இனங்களில் நியூசிலாந்தில் காணப்படும் டூவடரா (tuatara) என்ற இனத்தை தவிர மற்றவைகள் அழிந்து விட்டன. இப்போது இப்பூமியில் காணப்படும் ஊர்வனங்கள் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை.  உலகில் சுமார் 6,032 ஊர்வனங்கள் காணப்படுகின்றன. ஏறக்குறைய இவை பாலூட்டிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.

What is a reptile? Classification of animals is essential for their scientific study. Land - dwelling animal groups with backbone have been split into four classes: amphibians, reptiles, birds and mammals. Generally speaking, reptiles differ from amphibians by their dry, scaly skin; from birds by absence of feathers; and from mammals by absence of fur or hair. The class ‘reptiles` consists of lizards, crocodiles , turtles and tortoises and snakes . There are about 6,032 living species of reptiles, almost double the number of living species of mammals.

Source By : B.Vijayaragavan, Chennai Snake Park

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close