உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இத்தினம் முதல் முதலாக சனவரி 10 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Movement) தொடங்கியவர்.
முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனராம்.
இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000 க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
No. of Trees Planted