மனித உரிமை நாள் - Human Rights Day

மனித உரிமை நாள் - Human Rights Day

 

ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும்மனித உரிமை நாள்கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. .நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

Human Rights Day is celebrated annually across the world on 10 December every year. The date was chosen to honor the United Nations General Assembly`s adoption and proclamation, on 10 December 1948, of the Universal Declaration of Human Rights (UDHR), the first global enunciation of human rights and one of the first major achievements of the new United Nations. The formal establishment of Human Rights Day occurred at the 317th Plenary Meeting of the General Assembly on 4 December 1950, when the General Assembly declared resolution 423(V), inviting all member states and any other interested organizations to celebrate the day as they saw fit.

 The day is normally marked both by high-level political conferences and meetings and by cultural events and exhibitions dealing with human rights issues. Besides, it is traditionally on 10 December that the five-yearly United Nations Prize in the Field of Human Rights and Nobel Peace Prize are awarded. Many governmental and non-governmental organizations active in the human rights field also schedule special events to commemorate the day, as do many civil and social-cause organisations.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close