ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் InternationalFirefighters` Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது. தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை. இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது, சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும். வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது.
No. of Trees Planted