தேசிய கணித தினம் - National Mathematics Day

தேசிய கணித தினம் - National Mathematics Day

 

தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணித தினம் இந்திய அளவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்வி நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.2017 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் நகரில் இராமானுசன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகம் திறக்கப்பட்ட்தை தொடர்ந்து தேசிய கணித தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

 

The Indian government declared 22 December to be National Mathematics Day. This was announced by Prime Minister Manmohan Singh on 26 February 2012 at Madras University,to mark the 125th anniversary of the birth of the Indian mathematical genius Srinivasa Ramanujan (22 Dec 1887- 26 Apr 1920). On this occasion Singh also announced that 2012 would be celebrated as the National Mathematics Year.

Since then, India`s National Mathematics Day is celebrated every 22 December with numerous educational events held at schools and universities throughout the country. In 2017, the day`s significance was enhanced by the opening of the Ramanujan Math Park in Kuppam, in Chittoor, Andhra Pradesh.

 

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close