அனைத்துலக காணாமற்போனோர் நாள் - The International Day of the Disappeared

அனைத்துலக காணாமற்போனோர் நாள் - The International Day of the Disappeared

 

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

The International Day of the Disappeared, on August 30 of each year, is a day created to draw attention to the fate of individuals imprisoned at places and under poor conditions unknown to their relatives and/or legal representatives. The impulse for the day came from the Latin American Federation of Associations for Relatives of Detained-Disappeared (Federación Latinoamericana de Asociaciones de Familiares de Detenidos-Desaparecidos, or FEDEFAM), a non-governmental organization founded in 1981 in Costa Rica as an association of local and regional groups actively working against secret imprisonment, forced disappearances and abduction in a number of Latin-American countries.

Work on secret imprisonment is an important part of the activities for a number of international bodies and organizations in the fields of human rights activism and humanitarian aid, including for example Amnesty International (AI), the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) and the International Committee of the Red Cross (ICRC). The International Day of the Disappeared is an opportunity to highlight these institutions` work, increase public awareness, and to call for donations and volunteers.

Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close