உலக இதய தினம் - World Heart Day

உலக இதய தினம் - World Heart Day

 

உலக இதய தினம்

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய அறக்கட்டளையால் ஒழுங்கு செய்யப்படுகிறதுஉலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடு இன்மை ஆகிய ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் 80 % அகால மரணங்களைத் தவிர்க்கலாம்.

 

இந்த ஆண்டு பிரச்சாரத்தின் முக்கிய நடவடிக்கைக்கான அறைகூவல் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுவது ஆகும். மேலும், செயல் ஊக்கத்துடன் இருப்பது, புகைப்பழக்கம் ஒழிப்பது, ஆரோக்கிய உணவை உண்பது, உங்கள் பிள்ளைகளை இன்னும் செயல்பாடுகளுடன் இருக்கச் சொல்லுவது, ஆகியவற்றுடன் உங்கள் அன்புக்குரியவர்களை இந்த நடவடிக்கைகளைக் கடைபிடிக்கச் செய்வது; ஒரு சுகாதாரப் பரமரிப்பாளராக மேலும் உயிர்களைக் காப்பது; ஒரு கொள்கை வடிப்பவராக பரவா நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது (NCDs).

 

நம் உடலின் நுரையீரல், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற பாகங்களுக்கு இரத்தத்தை விநியோகம் செய்யும் இதயத்தையும் இரத்தக் குழல்களையும் பாதிக்கும் ஒரு தொகுதி நோய்களே  இதயக்குழல் நோய் ஆகும். உலக சுகாதார நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்குள் பரவா நோய்கள் மூலம் நிகழும் மரணங்களை 25% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் இதயக்குழல் நோய்களின் விகிதம் அதிகம்.

 

இந்நாட்களில் மரணம் மற்றும் ஊனத்துக்கான உலகின் முக்கிய காரணம்  இதயக்குழல் நோய்  ஆகும். இது ஆண்டுக்கு 1.75 கோடி மக்களைக் கொல்லுகிறது (அனைத்துப் பரவா நோய்கள் தொடர்பான மரணங்களில் பாதி). 2030-க்குள் 2.3 கோடி மரணங்கள் நிகழலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளன (இதயக்குழல் நோய்களினால் ஏற்படும் 31% உலகளாவிய மரணம்).

 

இப்போதே நடவடிக்கை எடுக்கும் விழிப்புணர்வை உருவாக்க உலக இதய நாள் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும், அரசுகளுக்கும் ஒரு முக்கிய மேடையை வழங்குகிறது. இதயக்குழல் நோயால் ஏற்படும் பளுவையும் அகால மரணத்தையும் குறைக்கவும் எங்கும் வாழ்கின்ற மக்கள் நீண்ட நாள் நலமுடன் ஆரோக்கியமான இதயத்துடன் வாழ உதவவும் ஒன்றிணையும் நமக்கு ஆற்றல் இருக்கிறது.

 

இதயக்குழல் நோய்களை எவ்வாறு தடுப்பது?

 

நடத்தை ஆபத்துக் காரணிகளை சரிசெய்வதன் மூலம் பல இதயக்குழல் நோய்களைத் தடுக்க முடியும்.

 

ஆரோக்கிய உணவை உண்ணவும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் போன்ற உணவுகளால் உங்கள் தினசரி உணவைச் செறிவூட்டுங்கள். விலங்கு கொழுப்பு, சீனி மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

புகைக்காதீர். புகைப்பவர் அருகில் நிற்காதீர்.

தொடர்ந்து உடல் பயிற்சி செய்யவும்இதய துடிப்பு விகிதத்தையும் சுவாசத்தையும் அதிகரிக்க தினமும் 30 நிமிடம் நடக்கவும். உடல் செயல்பாடு நோய் ஆபத்தைக் குறைக்கும்.

தொடர் கண்காணிப்பும் கட்டுப்பாடும்:

 

மிகை இரத்த அழுத்தம்: மாரடைப்பை உண்டாக்கும்

இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு இருந்தால்

இரத்தக் கொலஸ்ட்ரால்: மிகை கொலஸ்ட்ரால் மாரடைப்பை உண்டாக்கும்

மருந்துகளைக் கவனமாக உட்கொள்ளவும்: மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து உட்கொள்ளவும்.

 

உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: உங்கள் நலத்துக்காகவும் உங்கள் குடும்ப நலத்துக்காகவும் நீங்கள் செய்வது குறித்துப் பெருமைப்படவும்.

 

மாரடைப்பின் எச்சரிக்கைக் குறிகள் பற்றி அறியவும்:

 

சில நிமிடங்கள் நீடிக்கும் நெஞ்சின் நடுவில் மெல்லிய வலி அல்லது அசௌகரியம்

ஒரு அல்லது இரு புயங்கள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம்

மூச்சடைப்பு

குளிர் வியர்வை, குமட்டல், கிறக்கம்

முதல் உதவி

 

நோயாளியை உட்கார வைக்கவும் அல்லது அவருக்கு மிகவும் ஏற்ற நிலையில் வைக்கவும்

இறுகிய ஆடைகளைத் தளர்த்தவும்

நைட்ரோகிளிசரின் போன்ற இதய பிரச்சினைகளுக்கான நெஞ்சுவலி மருந்து உட்கொண்டு வந்தால் அதை உட்கொள்ள உதவவும்.

ஓய்வில் அல்லது நைட்ரோ கிளிசரின் உட்கொண்டு 3 நிமிடங்களில் வலி நிற்கவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை நாடவும்.

 

September 29 is observed as World Heart Day, an initiative by the World Heart Federation to spread awareness about cardiovascular diseases (CVD), including heart disease and stroke. The World Health Organisation (WHO) estimates that over 17.9 million people die of CVDs every year, accounting for over 31 per cent of global deaths. One-third of these deaths are premature (below 70 years). About 80 per cent of all CVDs manifest themselves as heart attacks or strokes and 75 per cent cases come from low and middle-income countries.

In 2013, the WHO developed targets to control and prevent non-communicable diseases – of which CVDs make a large part of – including a relative reduction of 25 per cent in overall mortality from CVDs by 2025. India’s National Health Policy 2017 too, aims to reduce premature mortality from CVDs, cancer, diabetes and chronic respiratory diseases by 25 per cent by 2025.


Source By : https://ta.nhp.gov.in/

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close