உலகப் பெருங்கடல்கள் நாள் - World Oceans Day

உலகப் பெருங்கடல்கள் நாள் - World Oceans Day

 

உலகப் பெருங்கடல்கள் நாள் ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிசன் எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது. உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், `உலக பெருங்கடல்கள் நாள்` ஆண்டுதோறும் அவதானிக்கப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

World Oceans Day is an international day that takes place annually on the 8th of June. The concept was originally proposed in 1992 by Canada`s International Centre for Ocean Development (ICOD) and the Ocean Institute of Canada (OIC) at the Earth Summit – UN Conference on Environment and Development (UNCED) in Rio de Janeiro, Brazil. World Oceans Day was officially recognised by the United Nations in 2008. The International day supports the implementation of worldwide Sustainable Development Goals (SDGs), and fosters public interest in the management of the ocean and its resources. The day is marked in a variety of ways, including launching new campaigns and initiatives, special events at aquariums and zoos, outdoor explorations, aquatic and beach cleanups, educational and conservation action programs, art contests, film festivals, and sustainable seafood events. Youth have been playing an increasingly important role since 2015. The World Oceans Day Youth Advisory Council has been helping lead conservation awareness and action efforts globally since 2016.
Source By: Wikipedia
Posted By: Naveen Krishnan, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close