???? ஒவ்வொரு
பெண்ணின் வாழ்விலும் வயதுக்கு வருகிற பருவம், கருத்தரிக்கிற பருவம், பெரி மெனோபாஸ், மெனோபாஸ் என்று நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்கு நிலைகளிலும் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட தகவல்கள், அப்போது செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பல இருக்கின்றன.
13 வயதுச் சிறுமியில் இருந்து 50 வயது பெண்வரை பீரியட்ஸ் பற்றிய அவர்களின் அத்தனை சந்தேகங்களையும் போக்கும்.
⭕ முதல் நிலை
வயதுக்கு வந்த புதிதில்
⭐‘ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம்’
மாதவிடாய், பெண்களுக்கு உடலில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை, மன ரீதியாகவும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு நிலை காரணமாக, இந்த மனநிலை மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி கோபம் அடைவது, காரணமே இல்லாமல் எரிச்சல் அடைவது, சோகமாக உணர்வது, அழுவது, சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வது, சட்டெனச் சோர்வடைவது போன்ற உணர்வுகள் ஏற்படும். இந்த மனநிலை மாற்றங்களைத்தான் ‘ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம்’ (Pre Menstrual Syndrome - PMS) என்கிறோம். குறிப்பாக, இதனால் சில பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். பலரும் இதை இயல்பாகக் கடந்துவிட, சில பெண்கள் மட்டும் இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இன்மையால் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.
⭐ சட்டென்று மாறுமா மனநிலை❓
அப்படிச் சொல்ல முடியாது. அவரவர் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு நிலையைப் பொறுத்துதான், ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம், மனநிலையில் மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தியாவில், 10 % முதல் 15 % பெண்கள்தான், இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்படுகின்றனர். இது பரம்பரை நோயோ அல்லது பெண்களுக்குக் கட்டாயம் ஏற்படும் நோயோ கிடையாது. நம் பழக்கவழக்கங்கள், நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் உடல் மாற்றம். சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுவலி, கால்வலி ஏற்படும். திருமணமான பெண்களுக்கு, மாதவிடாய் வருவதற்கு முன், ‘நாம் இன்னும் கர்ப்பமாகவில்லையே’ என்ற கவலை மனதில் இருக்கும். மாதவிடாய் ஏற்படும்போது, அது எரிச்சலாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ வெளிப்படும்.
உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பால், முட்டை போன்ற வைட்டமின் நிறைந்த உணவுகள், கீரை வகைகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, டீ ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமனாக இருப்பவர்கள், வாக்கிங் அல்லது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.
⭐ ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் பிரச்னை உள்ள பெண்களுக்கு, மெனோபாஸ் தொடங்குவதற்கு முந்தைய காலத்திலும் பாதிப்புகள் ஏற்படுமா❓
மெனோபாஸ் என்பது ஹார்மோன் குறைபாடு. ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் என்பது ஹார்மோன் சமநிலையின்மை. மறதி, கவனமின்மை, தன்னம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் இந்த இரண்டிலுமே ஏற்படும் என்றாலும், இரண்டுமே வெவ்வேறு உடல்நிலை மாற்றங்கள். உடல்வலி, மூட்டுவலி, போன்ற உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படும். ஆனால், மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் பெண்களுக்கு, ‘விரைவில் நமக்கு மாதவிடாய் நின்றுவிடும்’ என்ற எண்ணம், மனதளவில் சற்றே நிம்மதியை ஏற்படுத்தும். ஆனால், கால்சியம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால், சில உடல் உபாதைகள் ஏற்படலாம்.
⭐ ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கும், அதன் காரணமாக ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோம் ஏற்படுமா❓
மன அழுத்தத்துக்கும் ப்ரீ மென்ச்சுரல் சிண்ட்ரோமுக்கும் சம்பந்தம் இல்லை. மன அழுத்தத்தால் பிஎம்எஸ் ஏற்படாது. என்றாலும், ஏற்கெனவே ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு, பிஎம்எஸ் பாதிப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
⭕⭕ இரண்டாம் நிலை
கருத்தரிக்கிற பருவம்
மாதவிடாய் காலத்தில் முக்கியமான காலம், இனப்பெருக்கச் சுழற்சிக் காலம் (Reproductive Age Circle).
* பொதுவாகப் பெண்களுக்கு, 18 வயது முதல் 44 வயது வரை இனப்பெருக்கச் சுழற்சிக் காலம் ஏற்படும்.
* 21 வயது முதல் 35 வயது வரையிலான மாதவிடாய் சுழற்சியின்போது, கருவுறுதலில் உச்சம் (Peak Of Fertility) ஏற்படும். அந்த நேரத்தில் கர்ப்பம் அடைந்தால் எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாகக் குழந்தை பிறக்கும்.
* 28 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, நார்மல் சைக்கிள் (Normal Cycle).
* 24 நாள் முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, ரெகுலர் சைக்கிள் (Regular Cycle).
* 24 நாள்களுக்குக் குறைவான இடைவெளியில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி, ஷார்ட் சைக்கிள் (Short Cycle).
* மாதவிடாய் சுழற்சி இடைவெளி 35 நாள்களுக்கு மேல் அதிகரித்தால் அது ‘ஆலிகோமெனோரியா’ (Oligomenorrhea).
* ஷார்ட் சைக்கிளும், ஆலிகோமெனோரியாவும் ஹார்மோன் குறைபாடு அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட ஏதாவது பிரச்னை இருந்தால் ஏற்படும்.
* சீரான இடைவெளியில் ஏற்படும் நார்மல் சைக்கிள் பீரியட்ஸின் சுழற்சியை இரண்டாகப் பிரிக்கலாம்.ஃபாலிக்குலர் பேஸ் (Follicular Phase) மற்றும் லூட்டியல் பேஸ் (Luteal Phase)
* ஃபாலிக்குலர் பேஸ் என்பது, மாதவிடாய்க்குப் பிறகான 14 நாள்கள். கர்ப்பப்பையில் மாதாமாதம் நிறைய கருமுட்டைகள் வளரும். எந்த முட்டைக்கு அதிகளவில் நுண்ணுயிர் ஊக்கப்படுத்தும் ஹார்மோனை (Follicle Stimulating Hormone) வாங்கிக் கொள்கிற தன்மை இருக்கிறதோ, அந்த முட்டைதான் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும்.
* ஒரு முட்டை மட்டும் பெரிதாக வளர ஆரம்பித்ததும், மற்ற முட்டைகளுக்கெல்லாம் ஹார்மோன் சப்ளை கிடைக்காமல் அழிந்துபோகும். பெரிதாக வளர்ச்சியடைந்த முட்டை ஈஸ்ட்ராடயால் (Estradiol) என்கிற ஹார்மோனைச் சுரக்கும். அந்த ஹார்மோன் தேவையான அளவுக்குச் சுரந்த பிறகு, எல்ஹெச் (LH) என்கிற ஹார்மோன் அதிகமாகும். மாதவிடாயின் 12, 13-வது நாள் ஈஸ்ட்ரோடயால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பின்னர், எல்ஹெச் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும். அது சுரக்க ஆரம்பித்து 18-லிருந்து 36 மணி நேரத்துக்குள்ளாக, கருப்பையில் பெரியதாகி இருக்கிற முட்டை 18 மி.மீட்டரிலிருந்து 20 மி.மீட்டர் வரை வளர்ந்திருக்கும். அப்போது, எல்ஹெச் ஹார்மோன் அதிகரித்து அந்தக் கருமுட்டையானது கருப்பை நுண்ணறையில் இருந்து வெளியேறும். அந்த நேரத்தில் ஒரு பெண் உறவு மேற்கொள்ளும்போது கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு.
* 18 முதல் 36 மணி நேரம் எல்ஹெச் ஹார்மோன் அதிக அளவில் இருக்கும். அதன் பிறகு, அந்த முட்டை எப்போது வேண்டுமானாலும் நுண்ணறையில் இருந்து வெளிவரலாம். அந்த நேரத்திலும் கர்ப்பம் தரிக்க நேரிடும்.
* எல்ஹெச் ஹார்மோன் குறைந்த பின்னர், கர்ப்பம் தரித்திருந்தால், புரொஜெஸ்ட்ரோன் (Progesterone) என்கிற ஹார்மோன் சுரக்கும். பொதுவாக 5 முதல் 6 நாள்களில் கரு, கருப்பையில் உட்காரும். ஒருவேளை கர்ப்பம் தரிக்கவில்லை எனில், 21-வது நாளில் கார்பஸ் லூட்டியம் (Corpus Luteum) சுருங்க ஆரம்பித்து, அடுத்த சைக்கிளுக்குத் தேவையான சுழற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துவிடும். அதற்கடுத்து, கார்பஸ் லூட்டியம் விரிவதற்கு ஒரு வாரம் ஆகும். அதன் பிறகு, கருவுறாத முட்டை மாதவிடாயாக வெளியேறும்.
* மாதவிடாயின் 21-வது நாளில் கர்ப்பமாகி இருந்தால், 21-லிருந்து 28-வது நாளில் புரொஜெஸ்ட்ரோன் (Progesterone) ஹார்மோன் அதிகரித்து, பிரீயட்ஸ் சுழற்சியின்போது
No. of Trees Planted