கடவுள் படைக்காமல் பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?

கடவுள் படைக்காமல் பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?

 

கடவுள் படைக்காமல் பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியிருக்கும் என்பதை நிரூபிப்பது, படைப்பு-மறுப்புவாதிகளின் நீண்ட நாள் சவாலாக இருந்துவந்துள்ளது.

1924 ம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானியான அலெக்சாண்டர் ஒபாரின் இது தொடர்பில் ஒரு கருத்தியலை முன்வைத்தார். அதுதான் “Primordial Soup” (ஆதி கூழ்/கலவை).

சுமார் 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் காணப்பட்ட திரவ, வாயு மூலக்கூறுகள், காலநிலை மற்றும் ஏனைய நிபந்தனைகளின் விளைவாக, தானாகவே உயிர்க்கலங்கள் தோன்றியிருக்கும் என்கிற கருத்தியல்தான் அது.

அது எப்படி தானாகவே உருவாகும் !? பூமியில் உள்ள உயிரற்ற பதார்த்தங்களுக்கும், உயிருள்ளவற்றுக்கும் இடையே அடிப்படை ரசயானவியலில் பெரிதாக வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆகவே, அந்த இயற்கை ரசாயனங்களில் இருந்தே அடிப்படை உயிர் தோன்றியிருக்கும் என்பது அதன் வாதம்.

ஆனால், இதை நிரூபிக்க அப்போது வழியில்லை.

ஏனென்றால், 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் காணப்பட்ட கூழ்/சுப் போன்ற ரசாயன சேர்க்கையை உருவாக்கிப்பார்க்க வேண்டும். அப்படி உருவாக்கினாலும், ஒரு சில நாட்களிலோ மாதங்களிலோ நடந்துவிடும் செயற்பாடு அல்ல அது. மில்லியன் கணக்கிலான வருடங்களில் நடந்த நிகழ்வு. இருந்தாலும் ஒரு முயற்சி நிகழ்ந்தது.

ஸ்டான்லி மில்லர் மற்றும் “ஹரால்ட் யூரே ஆகிய ரசாயனவியலார்கள் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1952ம் ஆண்டில் ஒரு பரிசோதனையை நிகழ்த்திக்காட்டினார்கள்.

பூமியின் ஆதி கால வளிமண்டலத்தில்   காணப்பட்ட வாயுக்களை ஒத்த வாயுக்களை கொண்ட கலவையொன்றை  ஒரு கண்ணாடிக்குடுவையிலும் அதே ஆதிகால கடல் நீரை ஒத்ததான கடல் நீரை இன்னுமொரு குடுவையிலும் எடுத்துக் கொண்டனர்.  இவற்றை கொதிக்க வைத்தல், ஆவியாதல் மற்றும் மின்னல் போன்ற காலநிலை சார் செயற்பாடுகளுக்கு உட்படுத்தினர்.

அப்பரிசோதனைச் செயற்பாடுகளின் விளைவு மிக முக்கியமானதாக அமைந்தது. பரிசோதனையின் விளைவாக அக் கலவையில் உயிர்க்கலங்களுக்குள் காணப்படும் அமினோ அமிலங்கள் , DNA -R NA போன்றவற்றில் காணப்படும்  மூலக்கூறுகள் தானாகவே தோற்றம் பெற்றிருப்பதை கண்டறிந்தார்கள். இவைதான் ஒரு உயிரினத்தின் அல்லது உயிர் கலத்தின் அடிப்படை மூலக்கூறுகள்.

ஆதி வளிமண்டலத்தில் காணப்பட்ட ஐதரசன், காபன் , நைதரசன் போன்ற இரசாயன மூலகங்களின் தொகுப்பினாலேயே இவ் அமினோவமிலங்கள் உருவாகியிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த, முக்கியமான 20 அமினோவமிலங்களின் தொகுப்பினாலேயே உயிர்க் கலங்களின் பிரதான கூறுகளில் ஒன்றான புரதங்கள் உருவாகின்றன.

பரிசோதனை நிகழ்த்தப்பட்ட அந்த உபகரணம் 2007 ம் ஆண்டில் விஞ்ஞானி மில்லரின் இறப்பு வரை மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அதன் பின்னர் வேறு சில விஞானிகள் அவற்றை ஆய்வுக்குட்படுத்திய போதும் அதே அமினோவமில இரசாயன மூலப்பொருட்கள் காணப்பட்டன. அத்துடன் நவீன தொழில்னுட்பங்களின் அடிப்படையில்  மேலும் சில அமினோவமிலங்களையும் பிரித்தறியக் கூடியதாயிருந்தது. இதுவே primordial soup experiment / ஆதி கூழ் பரிசோதனை என்றும், miller-urey experiment / மில்லர் ஊரே பரிசோதனை என்றும் அறியப்படுகிறது.


Source By : facebook.com/அறிவியல்-உலகம்

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close