வெறும் காலில் நடப்பது நல்லதா ?

வெறும் காலில் நடப்பது நல்லதா ?

 

வெறும் காலில் நடப்பது நல்லதா ?

உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .

மிதியடிகள் மட்டும் பாதரட்சைகளாக இருந்த காலத்திலும் வெறும் காலில் நடப்பவர்களை நன்மையுள்ளவர்களின் கணத்தில் உட்படுத்தி யிருந்தனர் .

ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்து அவருடைய சமூக நிலையை மதிப்பது இன்றைய சமூகம் . உடற் பயிற்சிக்காக நடக்கும் போதும் இறுக்கிப்பிடிக்கும் ` ஷூஸ் ` அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது . " பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் " என்ற தாழ்வு மனப்பான்மையே இக்கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது . வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சினை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது.

வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என்று நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது . கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது . இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறிந்துள்ளனர் . பாதத்துக்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள் , மூளை , இருதயம் , சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புக ளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன . இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம் , அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும் . பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிட்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.

Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close