பிரசவிக்கும் ஆண் விலங்கு எது தெரியுமா? Do you know the male animal which give birth ?

பிரசவிக்கும் ஆண் விலங்கு எது தெரியுமா? Do you know the male animal which give birth ?

 

கடற்குதிரை – பிரசவிக்கும் ஆண் விலங்கு

கடற்குதிரை(Sea horse) என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். இதில் மொத்தம் 46 வகைகள் உள்ளன. பிற மீன்களைப் போலவே இதற்கும், செவுள்களும், துடுப்புகளும் உள்ளன. எனினும் இது மீனைப் போல் வடிவம் கொண்டதன்று. தலைப்பகுதி குதிரையைப் போன்று இருப்பதால் இது கடல் குதிரை என்றழைக்கப்படுகிறது. இப்போகாம்பசு என்பது இதனுடைய அறிவியல் பெயராகும். கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும், சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம். உடலமைப்பைப் பொறுத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 1.5 முதல் 35.5 செ.மீ (0.6 முதல் 14.0 அங்குலம்) வரை இருக்கும். முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கடல் குதிரைகள் பெரும்பாலும் உலகம் முழுவதும் ஆழமற்ற வெப்பமண்டல மற்றும் மிதமான உப்பு நீரில் காணப்படுகின்றன,சீக்ராஸ் படுக்கைகள்,கரையோரங்கள், பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற அடைக்கலமான பகுதிகளில் வாழ்கின்றன.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200-1500) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 1000 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். 0.5% க்கும் குறைவான  குஞ்சுகள் மட்டுமே தப்பிப் பிழைத்து வாழ்கின்றன. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் வாழ்விட அழிவின் விளைவாக கடல் குதிரைகள் ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

Seahorse – Male pregnancy
Seahorse is the name given to 46 species of small marine fish in the genus Hippocampus. Having a head and neck suggestive of a horse, seahorses also feature segmented bony armour, an upright posture and a curled prehensile tail. Seahorses range in size from 1.5 to 35.5 cm (0.6 to 14.0 in). Seahorses are mainly found in shallow tropical and temperate salt water throughout the world. They live in sheltered areas such as seagrass beds, estuaries, coral reefs, and mangroves. Since they are poor swimmers, they are most likely to be found resting with their prehensile tail wound around a stationary object. Although they are bony fish, they do not have scales, but rather thin skin stretched over a series of bony plates, which are arranged in rings throughout their bodies. The armor of bony plates also protects them against predators. Seahorses swim upright, propelling themselves using the dorsal fin,
The male seahorse is equipped with a pouch on the ventral, or front-facing, side of the tail. When mating, the female seahorse deposits up to 1,500 eggs in the male`s pouch. The male carries the eggs for 9 to 45 days until the seahorses emerge fully developed, but very small. The number of young released by the male seahorse averages 50–1000 for most species. When they are ready to be born, the male expels them with muscular contractions. Infants are susceptible to predators or ocean currents which wash them away from feeding grounds or into temperatures too extreme for their delicate bodies. Less than 0.5% of infants survive to adulthood, explaining why litters are so large. Seahorse populations are thought to be endangered as a result of overfishing and habitat destruction.

 

Article By : Bhuvaneswari Naveen, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close