நெல்சன் மண்டேலா சர்வதேச நாள் என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும். இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது. இதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும்.
விருதுகள்
நேரு சமாதான விருது
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.
பாரத ரத்னா விருது
1990-ல் இந்தியாவின் `பாரத ரத்னா` விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நோபல் பரிசு
1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெல்சன் மண்டேலா
தினம்
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற
சதுக்கத்தில் திருவுருவச்சிலை
ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார். நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nelson Mandela International Day (or Mandela Day) is an annual international day in honour of Nelson Mandela, celebrated each year on 18 July, Mandela`s birthday. The day was officially declared by the United Nations in November 2009, with the first UN Mandela Day held on 18 July 2010. However, other groups began celebrating Mandela Day on 18 July 2009.
On 27 April 2009, the 46664 concerts and the Nelson Mandela Foundation invited the global community to join them in support of an official Mandela Day. Mandela Day is not meant as a public holiday, but as a day to honour the legacy of Nelson Mandela, South Africa`s former President, and his values, through volunteering and community service. Mandela Day is a global call to action that celebrates the idea that each individual has the power to transform the world, the ability to make an impact.
The Mandela Day campaign message
is:
"Nelson Mandela has fought for social justice for 67 years. We`re asking you to start with 67 minutes."
"We would be honored if such a day can serve to bring together people around the world to fight poverty and promote peace, reconciliation and cultural diversity," according to a statement issued on Mandela`s behalf. To mark the first global celebration of Mandela Day on 18 July 2009, Mandela`s 91st birthday, a series of educational, art exhibit, fund-raising and volunteer events leading up to a concert at Radio City Music Hall on 18 July were organized by the 46664 concerts and the Nelson Mandela Foundation. In November 2009, the United Nations General Assembly formally declared 18 July to be "Nelson Mandela International Day".
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
No. of Trees Planted