உலகின் மிகப்பெரிய மலர் எது? - What is the largest flower in the world?

உலகின் மிகப்பெரிய மலர் எது? - What is the largest flower in the world?

 

ராஃப்லீசியா - இது தான் உலகின் மிகப்பெரிய மலர்

ராஃப்லீசியா அர்னால்டி ஒரு பூக்கும் தாவரமாகும்; இது பூமியில் மிகப்பெரிய தனிப்பட்ட பூவை உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் இந்த அரிய மலர் காணப்படுகிறது, மேலும் இது அந்நாட்டின் மூன்று தேசிய மலர்களில் ஒன்றாகும். இது 3 அடி வரை வளரக்கூடியது மற்றும் 15 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும்! 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும். இது ஒரு ஒட்டுண்ணி தாவரமாகும், இதில் கண்ணுக்கு தெரியும் இலைகள், வேர்கள் அல்லது தண்டு இல்லை. நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற இது ஒரு ஹோஸ்ட் தாவரத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. பூக்கும் போது, ராஃப்லீசியா அழுகும் வாசனையை வெளியிடுகிறது, இது அழுகும் இறைச்சியைப் போன்றது. எனவே பொதுவாக சடல லில்லி அல்லது பிண மலர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாசனை பூச்சிகளை ஈர்த்து அதன் மூலம் இத்தாவரத்தின் மகரந்தச் சேர்க்கையானது நடைபெறுகிறது.

Rafflesia - World`s largest flower

Rafflesia arnoldii is a flowering plant which is noted for producing the largest individual flower on Earth. This rare flower is found in the rainforests of Indonesia, which is one of the three national flowers in Indonesia. It can grow upto 3 feet and weigh up to 15 pounds! Can hold more than 5 kg of honey. It is a parasitic plant, with no visible leaves, roots, or stem. It attaches itself to a host plant to obtain water and nutrients. While blooming, the Rafflesia emits a repulsive odor similar to that of rotten meat, hence, commonly called as corpse lily or corpse flower. This odor attracts insects that pollinate the plant. 

 Source: Library of congress, Wikipedia

Article by: Bhuvaneswari Naveen, Thuraiyur.

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close