இது பாம்பு புத்தா?
புத்துல பாம்பு இருக்குமா?
புத்துல பால் ஊத்தலாமா?
(புற்று...)
என்ற கேள்விகள் நாங்கள் செல்லும் எல்லா பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கேட்கப்படும்!!!
சரி இருக்கான்னு பார்த்துருவோம்...
"கரையான் புற்றெடுக்க, பாம்பு வந்து குடி கொண்டதே" என்ற பழமொழி முதல் கேள்விக்கு பதில் தந்தது...
புற்றில் பாம்பு இருக்குமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்!
ஒரே குழப்பமா இருக்கே இந்த பதில்...
ஆமாங்க! பொதுவாக பாம்புகள் மறைந்து பதுங்கி வாழும் தன்மை கொண்டது. வெட்ட வெளிகளில் பார்ப்பது அறிது. அவைகள் மறைந்து கொள்ள ஒரு புதர், விறகு அல்லது கற் குவியல் போல இந்த புற்றும் உதவுகிறது.?
கறையான் இருக்கும் புற்று என்றால் கறையான்கள் ஒன்று சேர்ந்து பாம்பை விரட்டி விடும். ஆகையால் கரையான் விட்டு சென்ற புற்றுகளில் பாம்புகள் அவ்வப்போது பதுங்கி கொள்ளலாம்.
புற்றில் உள்ள பாம்பிற்கு(பாம்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்) பால் ஊற்றலாமா? என்று கேட்டால்! பசிக்கு அழும் குழந்தைக்கு, தெருவில் உள்ள நாய் அல்லது பூனைக்குட்டிக்கு ஊற்றலாம் அவைகள் பசியாரும். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது புண்ணியம் என்று படும், இல்லாதவர்களுக்கு மனநிறைவாகப் படும்.
புற்றில் நேரடியாக ஊற்றும் பால் புற்று மண் உறிந்து கொள்ளும், சிரட்டையில் ஊற்றும் பாலும் எலிகளை மற்றும் பூச்சிகளை பால் குடிக்க ஈர்க்கும் அவை தவளைகளை ஈர்க்கும். எலியும் தவளையும் பாம்பை ஈர்க்கும்.?
மேலும் பாம்புகள் பாலூட்டிகள் அல்ல, அவை ஊர்வன வகைப்பாடு. ஆகையால் பாம்பிற்கும் பாலுக்கும் இயற்கையில் தொடர்பில்லை. ஆனால் தாகம் எடுத்த பாம்பிற்கு முன் தண்ணீருக்கு பதிலாக பால் என்ற நீர்மப் பொருள் இருந்தால்(செயற்கையாக மனிதன் வைத்தது), அதையே குடித்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. பாம்பிற்கு அப்போது தேவையாக இருப்பது உயிர் வாழ நீர் அவ்வளவே அது வைக்கப் பட்டுள்ள பாலில் உள்ளது!
பாம்பு, கரையான், எலி, தவளை இயற்கையில் அவர்களுக்கான பணியினை அவர்கள் செய்து கொள்கின்றன. உணவாக்கி கொள்வதும், உணவாகிப் போவதும் அவைகளின் இயற்கை விதி, மனிதனின் இடையூறு தான் இந்த பால் கொடுக்கும் பணியெல்லாம். அது இயற்கைக்கும் இயற்கையால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கும் ஆபத்தே!!!
என்ன புத்துல பாம்பு இருக்கா?
Share :
Tags :