எக்ஸ்ரேக்கும் , ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

எக்ஸ்ரேக்கும் , ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

 

எக்ஸ்ரேக்கும் , ஸ்கேனுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

எக்ஸ்ரே , ஸ்கேன் இரண்டுமே மருத்துவத் துறையில் சாதனை புரிந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளாகும் . ராண்ட்ஜென் கண்டு பிடித்த எக்ஸ்ரே நம் உடலிலுள்ள எலும்புகளின் நிலை பற்றியும் , நுரையீரல் , இதயம் , இரைப்பை , கல்லீரல் , சிறுநீரகம் , கருவில் வளரும் சிசுவின் நிலை போன்றவற்றின் மேலோட்டமான நிலை பற்றியும் , முன்பின் ( ) பக்கவாட்டு பிம்பமாகவோ படம் பிடித்துக் காட்டும் . உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் எக்ஸ்ரேயினால் புலனறிய முடியவில்லை . ஆனால் ஹௌன்ஸ்பீல்ட் கண்டு பிடித்த சி.டி. ஸ்கேனர் உடலிலுள்ள உறுப்புகளையும் நுட்பமாக படம் பிடித்துக் காட்டுகிறது . எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் நம் தேவைக்கேற்ப , வசதிக்கேற்ப படம் பிடிக்க முடியும் . உடலில் எந்த மூலையில் எந்த மாறுபாடு இருந்தாலும் கண்டறிந்து விடலாம் . இதைத் தவிர எக்ஸ்ரேயில் படம் அத்தனை எடுத்த பிறகு அதற்கென உரிய முறையில் உரிய கரைசலில் கழுவிய பிறகே படம் நமக்கு தெரியும் . ஆனால் ஸ்கேனில் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறித் திரையில் உடல் உறுப்பின் பிம்பத்தை படத்தை உடனுக்குடன் நாம் பார்த்து அறியலாம் . ஸ்கேனுக்கு செலவு அதிகம் ஆகும் .

Article By :  Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close