பெண்களின் மாதவிடாய் ரத்தத்தின் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்!
மாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.
மாதவிடாய் காலத்தின் போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.
மாதவிடாயின்போது வெளிர் சிவப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. பொதுவாகவே இந்த நிறத்தில்தான் உதிரப்போக்கு இருக்கும். அது ஆரோக்கியமான மாதவிடாய் நிறம் என்று கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருப்பது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதை வெளிப்படுத்தும். ஓட்டப்பந்தைய வீராங்கனைகள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்கள். விளையாடுவது, குறிப்பாக ஓடுவதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு பிரச்சினைக்கான அறிகுறி யாகவும் இருக்கலாம்.
எந்த நிறமும் இல்லாமல் தண்ணீர் நிறத்திலோ அல்லது லேசான_இளஞ்சிவப்பு நிறத்திலோ ரத்தம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கான காரணமாகும். கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
அடர்பழுப்பு அல்லது அடர்சிவப்பு நிறமாக இருந்தால் கருப்பையினுள் பழைய ரத்தம் தேங்கி இருந்திருப்பதை குறிக்கும். ஆனால் இது சாதாரண விஷயமாக கருதப்படுகிறது.
அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாகவும், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவாகவும் இருப்பதை குறிக்கும். கட்டிகள் பெரிய அளவில் இருந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து பெரிய கட்டிகள் வெளிப் பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
கிரே மற்றும் கிரே கலந்த சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது எஸ்.டி.டி, எஸ்.டி.ஐ. எனப்படும் பாலியல் நோய் தொற்றுகளுக்கு ஆளாகி இருந்தாலோ இந்த நிறத்தில் ரத்தம் வெளிப்படும். துர்நாற்றம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஆரஞ்சு நிறத்தில் ரத்தம் இருந் தால் அதுவும் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும்.
Tags : #menses #menstruation #periods #period #blood #women #feminism #feminist #menstrualcycle #periodproblems #sexeducation #womenshealth #pcos #tampons #health #fertility #ovulation #periodssuck #pads #bleeding #endometriosis #periodcramps #womenempowerment #wombwellness #cantwaitformenopause #healthylifestyle #menstralcup #holistichealth #bbtcharting #annovulation #diaphragm #stabeminthedick #postnatal #girls #noclue #wellbeing #noidea #birthcontrol #youshouldseechildbirth #andbreastfeeding #tokoherbalbandung #mentalhealth #fertilityawareness #thepill #woman #periodpain #iud #reproductiverights #implanon #covid #menstruationmatters #gnf #globalnaturefoundation #naveenkrishnan
No. of Trees Planted