ஆஸ்டியோபோரோசிஸ்:
அலட்சியம்
வேண்டாம்!
‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினம் - 20 அக்டோபர்.
உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய். எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்கபடுகிறது.
இந்தியாவில் 50 வயதை கடந்த பெண்களில் 50% பேருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உள்ளது. 30 வயதை கடந்த பெண்களில் 4ல் ஒருவருக்கு உள்ளது. எனினும் மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் ஆண்களும் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடும் என அறிவித்திருக்கிறது ஐநா.
இந்நிலையில், எலும்பு மெலிதல் நோய் யாருக்கெல்லாம் வரும்? வராமல் தடுக்க என்ன வழி என்பது போன்ற சந்தேகங்களை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
எதனால்
வருகிறது?
எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
யாருக்கெல்லாம்
வரும்?
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைவாக இருக்கும் நபர்களுக்கு அதிக அளவில் இந்த நோய் தாக்கும். தற்போது ஆண்களை, இந்த நோய் அரிதாகத் தான் தாக்குகிறது. புகை பிடித்தல், ஒரு வாரத்துக்கு 200 மி.லி அளவை தாண்டி மது அருந்துபவர்கள், உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளதவர்கள், சூரிய ஒளி உடலில் படாமல் பெரும்பாலும் குளிர்சாதன வசதி உள்ள அறைகளிலேயே முடங்கிக் கிடப்பவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் பரம்பரை வழியாகவும் இந்த நோய் தாக்கும்..
எப்படி
அறியாலாம்?
எலும்பின் அடர்த்தித் தன்மை அறிவதற்கு என ‘டெக்சா’ என்றொரு மருத்துவ பரிசோதனை இருக்கிறது. டெக்சா பரிசோதனை முடிவில் ஒருவரின் எலும்பின் அடர்த்தித் தன்மை எவ்வளவு, வருங்காலத்தில் அவருக்கு ஆடியோபோரோசிஸ் நோய் வருமா எனக் கண்டறிய முடியும்.
மருந்து
உண்டா?
நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை குறைக்க நிவாரணி மட்டுமே உள்ளது. இந்த நோய் வந்தவர்கள், அதிகளவில் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடக் கூடாது. அதிக எடைகளைத் தூக்கக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. எனினும், மருத்துவர் ஆலோசனைபடி சிறு சிறு எளிய பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். கால்சியம் அதிகளவில் எடுத்துகொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பரிசோதிக்கும் பி.எம்.ஐ மதிப்பில் 25-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் மட்டுமே இருக்க வேண்டும். தினமும், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். அதிக அளவில் காபின் கலந்த காபியை குடிக்கக் கூடாது, மது, சிகரெட்டுக்குத் தடா போடவேண்டும்.
உடலின் எலும்புகளைப் பலவீனமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை விரட்டி அடிக்க இன்றே உறுதி எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி!
World Osteoporosis Day is observed annually on October 20th, and launches a year-long campaign dedicated to raising global awareness of the prevention, diagnosis and treatment of osteoporosis and metabolic bone disease. Organized by the International Osteoporosis Foundation (IOF), the World Osteoporosis Day campaign is accompanied by community events and local campaigns by national osteoporosis patient societies from around the world with activities in over 90 countries.
History
World Osteoporosis Day was launched on October 20th 1996 by the United Kingdom’s National Osteoporosis Society and supported by the European Commission. Since 1997, the awareness day has been organised by the International Osteoporosis Foundation. In 1998 and 1999, the World Health Organization acted as co-sponsor of World Osteoporosis Day. The day also marks the launch of a year-long campaign to raise awareness of osteoporosis and metabolic bone disease. Since 1999 these campaigns have featured a specific theme.
Source By : Vikadan.com
Article By :
பு.விவேக் ஆனந்த்
No. of Trees Planted