ஈசி நாற்காலி - நாம் புறக்கணித்த பொக்கிசங்களில் இதுவும் ஒன்று

ஈசி நாற்காலி - நாம் புறக்கணித்த பொக்கிசங்களில் இதுவும் ஒன்று

 

நாற்காலி (Chair) என்பது அமர்வதற்காக உருவாக்கப்பட்டது. பொதுவாக, ஓர் இருக்கையும், சாய்வதற்கேற்ற பின்பகுதியையும், நான்கு கால்களையும் கொண்டிதாக அமைக்கப்பட்டிருக்கும். கைபிடிகளையும் கொண்டிருக்கலாம். சாயும் பின்பகுதியற்றவை புட்டுவம் என்றும் இலங்கையில் அழைப்பர். உடல் இயக்கவியல் அறிவியல் தத்துவம் பல கொண்டு, தற்காலத்தில் இவை உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அதிக நேரம் இருக்கையில் அமர்வோருக்கு, பின்னாளில் பல்வேறு உடலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முதுகு தண்டிலும், வயிற்றிலும் நோய்கள் உருவாகின்றன. அவரவர் உடலுக்கு ஏற்றவாறு, பணிக்கு தகுந்த படி நாற்காலியை பயன்படுத்துதல் சிறந்த மருத்துவ ஆலோசனையாகக் கூறப்படுகிறது.

இப்பொழுது ஈசி நாற்காலி பற்றி பார்ப்போம்!

காலம் தின்று தீர்த்த விசயங்களில் இந்த ஈசி நாற்காலியும் ஒன்று!

கெட்டியான, பருத்தி துணியில் சின்ன கம்புகளால் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த நாற்காலி!

தினசரிகள், வாரந்திரிகள், புத்தகங்கள் படிக்க ஏற்றது. அப்படியே சாய்ந்து ஒரு குட்டித்தூக்கம் போடலாம்.

இப்போது அனைத்து நாற்காலிகளும் பிளாஸ்டிக்ல் இருக்கிறது. அதில் உட்காரும் போது இரத்த அழுத்தம், உடல் சூடு என பல்வேறு நோய்கள் வருகின்றன, அதுமில்லாமல் நீண்ட நேரம் அமருவதால் முதுகு வலியும் வருகிறது.

ஆனால் இந்த நாற்காலி நம் உடம்புக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கும். எந்த பக்க விளைவுகளும் இல்லாதது.

வயதானவர்களுக்கு இந்த நாற்காலி ஒரு பொக்கிசம்.

நாகரீகம் என்ற பெயரில் எத்தனையோ பொக்கிசங்களை நாம் புறக்கணிதோம். அப்படி புறக்கணித்த பொக்கிசங்களில் இதுவும் ஒன்று. 

Article By : களத்துமேடு சூரியன்

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close