தாகம் எப்போது ஏற்படுகிறது ? தாகம் எடுப்பது எதனால் ?

தாகம் எப்போது ஏற்படுகிறது ? தாகம் எடுப்பது எதனால் ?

 

தாகம் எப்போது ஏற்படுகிறது ? தாகம் எடுப்பது எதனால் ?

உடலில் நீரின் சம அளவு குறையும்போது , அந்த அளவைச் சரிகட்ட , மூளை நமக்குத் தெரிவிக்கும் உணர்வே தாகம் எடுத்தல் ஆகும் .

மூளையின் கீழ்தளத்தில் ஹைப்போதாலமஸ் என்ற பகுதி இருக்கிறது . இங்கு உடல் நீர்ச்சமநிலையை உணரும் உணர் வாங்கிகள் ( தாகமையம் ) இருக்கின்றன . நீர்ச் சமநிலை குறையும் போது இந்த தாகமையம் தூண்டப்பட்டு தாக உணர்வு ஏற்படுகிறது . அதனால் நீரை அருந்த முன் வருகிறோம் .

ஹைப்போதாலமஸின் தாக மையம் தூண்டப்படும் போது பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட்டு ஆன்டி - டையூரடிக் ஹார்மோன் ( ADH ) வெளிப்படுகிறது . இந்த ஹார்மோன் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்கள் மீது செயல்பட்டு , அதிக நீர் சிறுநீர் மூலம் வெளியேறாமலும் தடுக்கிறது . இந்த இரு காரணிகள் மூலம் உடலின் நீர்ச் சமநிலை சரிக்கட்டப்படுகிறது .

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close