படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் ?

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் ?

 

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் ?

 எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் " இவன் இடது பக்கமாக எழுந்தானோ " என்று கூறுவதுண்டு . இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம் .

மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது . நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர் .

நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன . இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது . இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது . காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன . எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும் . எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக்கொள்கின்றது .

Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close