குளித்து
முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன் ?
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டு மென்றும் , சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம் . திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் , இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது மிகவும் அவசியம் .
நம்முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர் . அதிகாலையில் எழுந்து கை , கால் , முகம் கழுவி , திருநீர்ச்ட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும் பின் மாறிடத்தும் , இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்வதை சிலராவது பார்த்திருப்போம் . மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை , கால் கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு .
ஆனால் குளித்த பின் திருநீர் எடுத்து நனைத்து உடலில் பூசிவந்தனர் . இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும் . இவ்வளவும் அறிந்த பின் , நம் உடலில் காலையிலும் மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதைக் கவனிப்போம் .
இரவு ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள்
பரவியிருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது , அதே போல் மாலை நேரத்தில் சுற்றுச்சூழலில் எண்ணற்ற நோயணுக்கள் உலவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு . அதனால்
காலையும் மாலையும் நோயணுக்களின் பாதிப்பு ஏற்படாம லிருக்க ஈரமில்லாத திரு நீரை அணிந்து
வருகின்றனர் . குளிக்கும் நேரம் உடலின் முட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும்
காலப் போக்கில் அது வாயிலாக கொழுப்பு அதிகரிக்கவும் அது முட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு
. இப்படி உருவாகும் நீர்க்கட்டை தவிர்ப்பதற்காகத்தான் குளித்த உடன் ஈரமான திரு நீர்
அணிவது.
Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #sciencefacts #facts #science #factsdaily #fact #instafacts #dailyfacts #coolfacts #amazingfacts #didyouknow #factz #factsonfacts #realfacts #physics #allfacts #truefacts #worldfacts #sciencememes #creepyfacts #interestingfacts #knowledge #didyouknowfacts #knowledgeispower #factsonly #funfacts #chemistry #dailyfact #factsoflife #factss #psychologyfacts #astronomy #scienceiscool #scientist #factsss #physicsmemes #space #biology #astrophysics #sciencejokes #facto #factsaboutme #universe #scaryfact #spacefacts #bratayleyfacts #memes #factoftheday #unknownfacts #cosmology #sciencelover #nasa #scienceteacher #kpopfacts #scienceisfun #cosmos #dyk #blackhole #sciencefun #physicsfacts #naveengarden #naveenkrishnan #wfh #workfromhome #farmstay #farmhouse #integratedfarming #villagelife #trainingcenter #petsworld
No. of Trees Planted