விடியற்காலையில் எழுந்து நடந்து சென்று நீரில் மூழ்கிக் குளிக்க வேண்டுமென்பது ஏன் ?
பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால்
அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும் . காலையில் எழுந்ததும்
நெடுதூரம் நடந்து சென்று நீரில் மூழ்கிக்குளிக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் போதித்துள்ளனர்
.
பொதுவாக ஓடும் நதிகளிலும் , கோயில்க்குளங்களிலும் குளிப்பது
தானே வழக்கம் . அதிகாலையில் கோயில் குளத்தில் குளிப்பது மிக சிறப்பானதாகக் கருதியிருந்தனர்
. மூழ்கிக்குளிப்பதன் சிறப்பு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் நெடுதூரம் நடந்து
சென்று தான் குளிக்க வேண்டும் என்பதன் இரகசியம் என்னவென்பதே கேள்வி . குளிப்பதற்காக
சிறிது நடக்க வேண்டி யிருந்தால் அது ஓர் உடற்பயிற்சியாகவே சிறப்பித்திருந்தனர் . இப்படி
நடக்கும் போது சுத்த வாயு சுவாசிக்க இயலும் . இதனால் மனதுக்கு நிம்மதியும் உடலுக்கு
சுகமும் இளைப்பாறுதலும் கிடைக்கின்றது .
கோயில் குளத்தில் மூழ்கிக் குளிப்பதனால் நமக்குக் கிடைப்பது
உடல் சுத்தி மட்டுமல்ல . இது பிராணயாமத்தின் பயனளிக்கும் என்று மூதாதையர் கூறியுள்ளனர்
. சுவாசத்தை ஆரோக்கியமாக கட்டுப் படுத்தும் பிராணயாமம் பலவகையிலுண்டு . நீண்ட சுவாசம்
இழுத்து , பின் மெதுவாக விடுவது தான் பிராணயாமத்தின் முறை . இதனால் உடலிலுள்ள கோடானுகோடி
கோசங்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கின்றது . இதன் பயன்கள் எண்ணற்றது . புத்தி கூர்மையும்
ஞாபகசக்தியும் அதிகரிக்க பிராணயாமம் உதவுகின்றது என்று நவீன நவீன சாஸ்திரம் அங்கீகரித்துள்ளது
.
Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #sciencefacts #facts #science #factsdaily #fact #instafacts #dailyfacts #coolfacts #amazingfacts #didyouknow #factz #factsonfacts #realfacts #physics #allfacts #truefacts #worldfacts #sciencememes #creepyfacts #interestingfacts #knowledge #didyouknowfacts #knowledgeispower #factsonly #funfacts #chemistry #dailyfact #factsoflife #factss #psychologyfacts #astronomy #scienceiscool #scientist #factsss #physicsmemes #space #biology #astrophysics #sciencejokes #facto #factsaboutme #universe #scaryfact #spacefacts #bratayleyfacts #memes #factoftheday #unknownfacts #cosmology #sciencelover #nasa #scienceteacher #kpopfacts #scienceisfun #cosmos #dyk #blackhole #sciencefun #physicsfacts #naveengarden #naveenkrishnan #wfh #workfromhome #farmstay #farmhouse #integratedfarming #villagelife #trainingcenter #petsworld
No. of Trees Planted