ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7ஆம் தேதி, உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைனில் சாக்லேட் விற்பனை குறித்து, இந்தியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருட்களில், சாக்லேட் சுமார் 50% இடத்தை பிடித்துள்ளது. மேலும் உணவுப் பொருள் ஆர்டர்களில் டாப் இடங்களில் இருப்பதில் 60% சாக்லேட் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெண்களின் பங்கு 25% அதிகம் ஆகும். வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும், இந்தியர்கள் பாரபட்சமின்றி சாக்லேட்களை ஆர்டர் செய்து குவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, காதலர் தினத்தில் வேறெந்த உணவுப் பொருட்களுக்கும் இல்லாத மவுசு சாக்லேட்டிற்கு உண்டு.
சாக்லெட் என்கிற பேரைக் கேட்டாலே உற்சாகத் துள்ளலை ஏற்படுத்தக் கூடிய சாக்லெட்டை சாப்பிடுவதால் ஏற்படும் இன்பம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?
பாலியல் உணர்வைத் தூண்டும் : சாக்லெட் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர்.
குறையும் கொழுப்புச் சத்து : உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.
அறிவாற்றலை அதிகரிக்கும் : சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. ஹார்வர்ட் ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சாக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதயப் பிரச்சனைகள் நீங்கும் : சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என பி.எம்.ஜே. நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
பக்கவாதம் வராது : தினமும் 100 கிராம் சாக்லெட்டை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராது என ஜர்னல் ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கனாவில் நிகழ்த்திய ஆய்வில் சாக்லெட் உட்கொள்வதால் பக்கவாதம் இருப்போருக்கு 22 சதவீதம் குறைய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
அதிகம் உண்டாலும் ஆபத்து : இத்தனை நன்மைகளா ?என அதிகமாக சாக்லெட்டுகளை உண்டாலும் அது ஆபத்தானதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அளவாக உண்ணுங்கள் ; ஆரோக்கியமாக வாழுங்கள்.
World Chocolate Day, is referred to, in some instances, as International Chocolate Day, is an annual observance that occurs globally on `7th of July. References to World Chocolate Day being observed on 7th of July have been recorded as early as 2009. Celebration of the day includes the consumption of chocolate. Some references indicate that this day celebrates the introduction of chocolate to Europe in 1550. Many other chocolate day celebrations exist, such as National Chocolate Day in the United States on 28 October. Confusingly, the U.S. National Confectioners Association lists 13 September as International Chocolate Day.
Source By : Tamil News 18
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #chocolateday #chocolate #love #roseday #valentines #teddyday #valentine #valentinesday #hugday #promiseday #valentinesweek #chocolatelover #handmadegifts #valentinesgift #valentinesdayspecial #valentineweek #gift #kgoldrose #valentinehamper #valentineweekgifts #happychocolateday #valentinesdaygift #giftforhim #chocolates #giftideas #chocolatedaygift #chocolatelovers #chocolatedayspecial #foodie #giftforgirlfriend #giftforgirl #india #instagram #foodporn #giftsforhim #giftsforher #delicious #customised #chocolatelove #giftslove #giftforspecialday #darkchocolate #yummy #february #dairymilk #valentinesdaygifts #chocolatebomb #july07 #17july2020
No. of Trees Planted