நிலவு மறைப்பு அல்லது சந்திர
கிரகணம் (lunar eclipse) என்பது கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு
கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே
நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. எனவே ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே
நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு
மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும். (முழுமையான புறநிழல் நிலவு
மறைப்பு, பகுதி நிலவு மறைப்பு, நடு நிலவு மறைப்பு). முழுமையான நிலவு மறைப்பின் போது,
கதிரவ வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து
நிலவின் மீது படுகிறது. மேலும் புவியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு கதிரவ ஒளியை சிதறடிக்கிறது.
இதனால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிற ஒளியில் தோற்றமளிக்கும். எனவே இது குருதி
நிலவு ( Blood Moon ) என்றும் அழைக்கப்படுகிறது.
கதிரவ மறைப்பு போலல்லாமல்,
புவியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் நிலவு மறைப்பைக் காண முடியும்.
சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் முழு கதிரவ மறைப்பைப் போலில்லாமல் நிலவு மறைப்பு
சில மணிநேரங்கள் வரை நீடிக்கும். மேலும் கதிரவ மறைப்பு போலில்லாமல் நிலவு மறைப்பை எந்தவொரு
பாதுகாப்புக் கருவிகளும் இன்றி வெறும் கண்களால் காண இயலும்.
A lunar eclipse
occurs when the Moon moves into the Earth`s shadow. This can occur only when
the Sun, Earth, and Moon are exactly or very closely aligned (in syzygy), with
Earth between the other two. A lunar eclipse can occur only on the night of a full
moon. The type and length of a lunar eclipse depend on the Moon`s proximity to
either node of its orbit (A total penumbral lunar eclipse, A partial lunar
eclipse, A central lunar eclipse). During a total lunar eclipse, Earth
completely blocks direct sunlight from reaching the Moon. The only light
reflected from the lunar surface has been refracted by Earth`s atmosphere. Due
to this reddish color, a totally eclipsed Moon is sometimes called a blood
moon.
Unlike a solar
eclipse, which can only be viewed from a relatively small area of the world, a
lunar eclipse may be viewed from anywhere on the night side of Earth. A total
lunar eclipse can last up to nearly 2 hours, while a total solar eclipse lasts
only up to a few minutes at any given place, due to the smaller size of the
Moon`s shadow. Also unlike solar eclipses, lunar eclipses are safe to view
without any eye protection or special precautions, as they are dimmer than the
full Moon.
Source By : Wikipedia
Article By :
Bhuvaneswari Naveen, Thuraiyur.
Tags : #சந்திரகிரகணம் #lunareclipse #moon #fullmoon #eclipse #goldenglare #itsfunneh #lunar #solareclipse #astrology #rainbwoah #luna #krew #rainbwoahedit #bloodmoon #eclipselunar #moonlight #chandrayaan #night #wolfmoon #lunareclipseedit #astrophotography #paintingrainbows #totallunareclipse #nature #nasa #newmoon #space #sky #science #satellite #moonphases #isro #orbit #gnf #Globalnaturefoundation
No. of Trees Planted