புள்ளி மூக்கு வாத்து (spot-billed duck) நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் சில வாத்து வகைகளுள் ஒன்றாகும். அலகின் நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி உள்ளது இவைகளின் தனிச்சிறப்பு. பொதுவாக திறந்த வெளி நன்னீர் ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் நீருக்கு அடியில் சென்று உணவு தேடாது. நீரின் மேற்புறத்திலேயே இருக்கும் பாசி, சின்னச் சின்னத் தாவரங்கள் போன்றவையே இவற்றின் உணவு. வட இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், தென் இந்தியாவில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும். இந்தியா முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவையான இது, வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண், பெண் பறவைகள் இணையாக இணைந்துதான் இரை தேடும். காலை, மாலை வேளையில்தான் இவை இரைதேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடி, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது. மித வெப்ப மற்றும் கிழக்கு ஆசியாவில் பரவலாகக்காணப்படும் இவ்வாத்துக்களின் துணை இனங்களுக்கேற்ப காணப்படுகின்றன. இவை தெற்கு பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் ஜப்பானில் தெற்கு வரையிலும் வாழ்கின்றன. எனினும் இதன் வடக்கு பிராந்தீய துணை இனமான கிழக்கு புள்ளி-மூக்கு வாத்து வலசை வரக்கூடியதாகையால் இவை குளிர்காலத்தை தென்கிழக்கு ஆசியாவில் கழிக்கின்றன. இவை இனவிருத்தி காலங்கள் தவிர ஏனைய நேரங்களில் சிறு கூட்டங்களாக வாழ விழைகின்றன. புவியின் தட்பவெப்ப மாற்றத்தின் காரணமாக வடக்கில் வாழும் கூட்டங்கள் 500 கி.மீ. வடக்கே தன் எல்லைகளை அதிகரித்துள்ளன.
Photo: Raveendran Natarajan, Madurai.
No. of Trees Planted